Published : 01 Feb 2018 10:43 AM
Last Updated : 01 Feb 2018 10:43 AM

உள்ளாட்சித் தேர்தலுக்காக தனிக் கட்சி தொடங்கப்படும்: தங்க.தமிழ்ச்செல்வன் தகவல்

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக தனிக் கட்சி தொடங்கப்படும் என்று டிடிவி.தினகன் அணி ஆதரவாளர் தங்க.தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

தமிழகத்தில் பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை பல விவசாயிகளுக்கு இன்னும் வழங்கப்படவில்லை. இந்நிலையில், காவிரி நதிநீர் விவகாரத்துக்காக கர்நாடக முதல்வரை சந்திப்பேன் என்று முதல்வர் பழனிசாமி கூறுவது வெறும் நாடகம்.

ரஜினி நல்ல நடிகர். இதுவரை, மக்கள் பிரச்சினைகளுக்காக அவர் குரல் கொடுத்ததில்லை. அவர் நினைத்தால் கர்நாடக முதல்வரை சந்தித்து, காவிரியில் தண்ணீர் திறந்து விட முயற்சி செய்திருக்கலாம். ஆனால், அப்படி செய்யாத சூழலில் மக்கள் எப்படி அவருக்கு ஓட்டு போடுவார்கள்.

நாங்கள்தான் உண்மையான அதிமுக. அதிமுக அம்மா அணி குறித்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. அதனால்தான், தினகரன் ஆர்.கே.நகரில் சுயேச்சையாக போட்டியிட்டார். உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக தனிக் கட்சி தொடங்க உள்ளோம். அதற்கான ஆலோசனை நடைபெற்று வருகிறது.

தமிழக அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்ய ஆலோசித்து வருகிறார்கள். மெஜாரிட்டி இல்லாமல் எப்படி பட்ஜெட் தாக்கல் செய்ய முடியும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x