அங்கித் திவாரி ஜாமீன் மனு மீது நீதிமன்றத்தில் இன்று உத்தரவு

அங்கித் திவாரி ஜாமீன் மனு மீது நீதிமன்றத்தில் இன்று உத்தரவு

Published on

திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு மருத்துவரிடம் லஞ்சம் பெற்ற வழக்கில் அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமீன் மனு மீது நீதிபதி இன்று உத்தரவு பிறப் பிக்கிறார்.

திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ்பாபுவிடம் லஞ்சம் பெற்ற வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இவர் ஜாமீன் கோரி இரண்டாவது முறையாக திண்டுக்கல் தலைமை குற்றவியல் நடுவர் மன்ற நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

நீதிபதி மோகனா முன்னிலையில் இந்தமனு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள் ளப்பட்டது. லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் அரசு வழக்கறிஞர் அனுராதா, அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்புத் தெரிவித்தார்.

அமலாக்கத் துறை அதிகாரியின் வழக் கறிஞர் செல்வம், ஜாமீன் தர உத்தரவிடலாம் என முந்தைய நீதிமன்ற உத்தரவுகளை மேற்கோள்காட்டி வாதாடினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மோகனா, அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்குவது குறித்து செவ்வாய்கிழமை (இன்று) உத்தரவிடுவதாக தெரிவித்து வழக்கை தள்ளிவைத்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in