Published : 06 Feb 2024 06:00 AM
Last Updated : 06 Feb 2024 06:00 AM
சென்னை: ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி மற்றும் நாடகம் நடைபெற்றது. புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில் ‘உலக புற்றுநோய் தினம்’ 2000-ம்ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் பிப். 4-ம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
புற்றுநோய் தினத்தையொட்டி, நேற்று சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
மருத்துவமனையின் டீன் தேரணிராஜன் தலைமையில் நடந்த பேரணியில் புற்றுநோய் அறுவைசிகிச்சை துறைத் தலைவர் கோபு, புற்றுநோய் மருத்துவத் துறைத் தலைவர் கண்ணன், புற்றுநோய் கதிர்வீச்சு துறைத் தலைவர் விஜயஸ்ரீ மற்றும் மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் கலந்துகொண்டனர். பேரணி முடிவில் 2024-ம் ஆண்டுக்கான உலக புற்றுநோய் தின கருப்பொருள் உறுதிமொழியை அனைவரும் எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து, புற்றுநோயை தடுப்பது, ஆரம்ப நிலையில் கண்டறிதல் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவ மாணவர்கள் விழிப்புணர்வு நாடகம் மூலம் பொதுமக்களுக்கு விளக்கினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT