Published : 17 Feb 2018 09:19 AM
Last Updated : 17 Feb 2018 09:19 AM

சென்னை பல்கலை. தொலைதூரக் கல்வி: எம்பிஏ பட்டதாரிகளுக்கு இன்று குறைதீர்ப்பு முகாம்

சென்னை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி எம்பிஏ மாணவர்களுக்கான குறைதீர்ப்பு முகாம் பல்கலைக்கழக நூற்றாண்டுவிழா கட்டிடத்தில் அறை எண் எப்-50-ல் இன்று(17-ம் தேதி) காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

எம்பிஏ மாணவர்களுக்காக நடத்தப்படும் இந்த பிரத்யேக முகாமில், பட்டச் சான்றிதழ்களை (2015 டிசம்பர் மற்றும் 2016 ஜூனில் பட்டம் பெற்றவர்கள்) பெற்றுக் கொள்ளலாம்.

அவர்கள் படிப்பு நிறைவுச் சான்றிதழ் நகல், பட்டச் சான்றிதழ் பெறுவதற்கு கட்டணம் செலுத் திய விவரங்கள், அடையாள அட்டை ஆகியவற்றை காண்பிக்க வேண்டும். எம்பிஏ மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு சென்னை பல்கலைக்கழக பதிவாளர் இராம.சீனுவாசன் கேட்டுக்கொண் டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x