

சென்னை: பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா பிப்.11-ம் தேதி சென்னை வருகிறார். அப்போர் அவர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன், எல்.முருகன், கேசவ விநாயகம் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்து நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்க இருக்கிறார்.
இதைத்தொடர்ந்து, அன்றைய தினம் சென்னையில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் ஜெ.பி.நட்டா பங்கேற்று, நிர்வாகிகள், தொண்டர்கள், முன்னிலையில் பேசுகிறார். பொதுக்கூட்டம் நடத்துவதற்காக, ஒய்எம்சிஏ மைதானம் உட்பட 3 இடங்களை பாஜக மூத்த நிர்வாகிகள் தேர்வு செய்து வைத்துள்ளனர். விரைவில் அதில் ஒரு இடம் தேர்வு செய்யப்பட்டு, அங்கு பொதுக்கூட்டத்துக்கான பணிகளை தொடங்க இருப்பதாக பாஜக நிர்வாகிகள் தெரிவித்தனர்.