

சேறும், சகதியுமான சாலையைத் தவிர்த்து ஸ்மால் பஸ்கள் தடம் மாறி செல்வதால், பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகிறார்கள்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதி மிட்ன மல்லி. பட்டாபிராம், சி.டி.எச்., சாலையிலிருந்து 9 கி.மீ., தூரத்தில் உள்ள மிட்னமல்லி பகு திக்கு செல்ல பயன்படும் சாலை, 8 கி.மீ., நீளமுள்ள இந்திய விமானப் படை சாலை. இச்சாலையை ஒட்டி, பட்டாபிராம்- பாரதியார் நகர், கக்கன்ஜி நகர், சாஸ்திரிநகர், பாபுநகர், அம்பேத்கர் நகர், உழைப் பாளர் நகர், பி.டி.எம்.எஸ்., உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.
ஆனால், இச்சாலையில் பல ஆண்டுகளாக பஸ்களே சென்ற தில்லை. இதனால், பாரதியார் நகர், உழைப்பாளர் நகர் உள்ளிட்ட பகுதி களைச் சேர்ந்தவர்கள் மிட்னமல்லி பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு செல்ல வும், ஆவடி உள்ளிட்ட பகுதி களுக்கு செல்லவும் மிகுந்த சிரமப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், அரசு புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள, ‘ஸ்மால்’ பஸ்களில், `எஸ் 47’ என்ற தடம் எண் கொண்ட இரு பஸ்கள், ஆவடியில் இருந்து மிட்ன மல்லிக்கு இந்திய விமானப் படை சாலை வழியாக கடந்த பிப்ரவரி மாதம் செல்ல தொடங்கியது.
பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற இப்பஸ் கள், கடந்த பத்து நாட்களுக்கு மேலாக , இந்திய விமானப் படை சாலை வழியாக செல்லாமல் தடம் மாறி, கோவில் பதாகை, சி.ஆர்.பி.எப்., உள்ளிட்ட பகுதிகள் வழியாக மிட்னமல்லி பகுதிக்கு சென்றுவருகின்றன.
இதுகுறித்து, சென்னை மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:
பட்டாபிராம் வழியாக மிட்ன மல்லி பகுதிக்கு செல்ல பயன் படும் இந்திய விமானப் படை சாலை குண்டும், குழியுமாக மாறி பல மாதங்களாகிவிட்டன. இதனால், அச்சாலையில் பஸ் சென்றால், விபத்துகள் ஏற்பட வாய்ப் புள்ளது. எனவே, புதிய சாலை அமைக்கும்வரை இந்திய விமானப் படை சாலை யில் `ஸ்மால்’ பஸ்களை இயக்கு வதை தற்காலிகமாக நிறுத்திவைத் துள்ளோம்” என்றார்.
பட்டாபிராம் - பாரதியார் நகர் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் தெரிவித்ததாவது:
“கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய விமானப் படை சாலை பகுதியில் பாதாள சாக்கடை பணியை ஆவடி நகராட்சி மேற்கொண்டது. அதற் காக சாலையின் பல பகுதிகளில் பள்ளம் தோண்டியது நகராட்சி. ஆனால், அப்பணி முடிந்து ஓராண்டு ஆகியும் புதிய சாலை அமைக்கப்படவில்லை. சாலையில் சில ஒட்டு வேலை களை மட்டும் நகராட்சி நிர்வாகம் செய்தது. அது சில நாட்கள் கூட நீடிக்கவில்லை.
தகுந்த பராமரிப்பு இல்லாததால் சாலையின் குழிகளில் நீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால், பொது மக்களின் வரவேற்பைப் பெற்ற ‘ஸ்மால்’ பஸ்கள் ஆறு மாதங் களிலேயே தடம் மாறி செல்லத் தொடங்கிவிட்டன. `ஸ்மால்’ பஸ்களை பயன்படுத்திய ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் மிகுந்த அவதிக்குள்ளா கிறார்கள்” என்றார்.
இதுகுறித்து ஆவடி நகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:
“இந்திய விமானப் படை சாலை, ராணுவத்துக்குச் சொந்த மானது. எனவே நகராட்சி நிர்வாகம், அச்சாலையில் புதிய சாலை அமைக்க இயலாது. வாகனங்கள் செல்ல முடியாத சூழலில் உள்ள இந்திய விமானப் படை சாலையில், புதிய சாலை அமைக்க நகராட்சி நிர்வாகம் சார்பில் ராணுவ அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தோம். அதனை ஏற்ற ராணுவ அதிகாரிகள் விரைவில் புதிய சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்’’.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.