Published : 04 Feb 2024 04:00 AM
Last Updated : 04 Feb 2024 04:00 AM
சென்னை: ஊதிய முரண்பாடுகளை களைதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 19-ம் தேதி உண்ணா விரதம் நடத்தவுள்ளதாக டிட்டோ ஜாக் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு ( டிட்டோ ஜாக் ) பொதுக் குழு கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம்: இடை நிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு களைந்து, மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் டிட்டோ ஜாக் அமைப்புடன் கடந்த அக்டோபர் 12-ம் தேதி நடைபெற்ற பேச்சு வார்த்தையில் ஏற்றுக் கொண்ட 12 நிதி சாராத கோரிக்கைகள் மீது உடனே ஆணை பிறப்பிக்க வேண்டும்.
பதவி உயர்வை கேள்விக் குறியாக்கும் அரசாணை 243-யை ரத்து செய்ய வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாளான பிப்ரவரி 19-ம் தேதி கூட்டமைப்பு சார்பில் உண்ணா விரத உரிமை மீட்பு போராட்டம் நடத்தப்பட உள்ளதாக டிட்டோ ஜாக் பேரமைப்பு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT