Published : 04 Feb 2024 04:04 AM
Last Updated : 04 Feb 2024 04:04 AM

குமரி, கோவைக்கு சிறப்பு ரயில் இயக்கம்

சென்னை: பயணிகள் நெரிசலை குறைக்கும் வகையில், சென்னையில் இருந்து கன்னியாகுமரி, கோயம்புத்தூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.

எழும்பூரில் இருந்து பிப்.5-ம் தேதி மதியம் 1 மணிக்கு சிறப்பு ரயில் ( 06042 ) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 2.45 மணிக்கு கன்னியாகுமரியை அடையும். கன்னியாகுமரியில் இருந்து பிப். 4-ம் தேதி இரவு 8.30 மணிக்கு சிறப்பு ரயில் ( 06041 ) புறப்பட்டு, மறுநாள் காலை 9.45 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.

சென்னை - கோவை: கோவையில் இருந்து பிப்.4-ம் தேதி இரவு 11.30 மணிக்கு அதி விரைவு ரயில் ( 06043 ) புறப்பட்டு, மறு நாள் காலை 8.20 மணிக்கு சென்ட்ரலை வந்தடையும். சென்ட்ரலில் இருந்து பிப்.5- ம் தேதி காலை 10.20 மணிக்கு சிறப்பு ரயில் ( 06044 ) புறப்பட்டு, அதே நாள் இரவு 8.25 மணிக்கு கோவை சென்றடையும். இந்த சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x