சிறுவர் பைக் ஓட்டியதற்காக பெற்றோருக்கு ரூ.26,000 அபராதம் @ காரைக்குடி

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

காரைக்குடி: காரைக்குடியில் சிறுவர் மோட்டார் சைக்கிள் ஓட்டியதற்காக பெற்றோருக்கு ரூ.26,000 அபராதம் விதிக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டத்தில் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் அதிவேகமாகவும் கவனக்குறைவாகவும் மோட்டார் சைக்கிள்களை ஓட்டி விபத்துகளை ஏற்படுத்துவதாக புகார் எழுந்தது. இதை தடுக்க சிறுவர்கள் மோட்டார் சைக்கிள் ஓட்டினால் அவர்களது பெற்றோர் மீது வழக்கு பதிய மாவட்ட எஸ்பி அரவிந்த் உத்தரவிட்டார். இதையடுத்து காரைக்குடியில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய சிறுவரின் பெற்றோர் மீது காரைக்குடி போலீஸார் வழக்கு பதிந்தனர்.

இந்த வழக்கில் காரைக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் சிறுவரின் பெற்றோருக்கு ரூ.26,000 அபராதம் விதித்ததோடு, சிறுவர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளின் பதிவை ஓராண்டுக்கு நிறுத்தி வைக்க உத்தரவிட்டார்.

இது குறித்து மாவட்ட எஸ்பி அரவிந்த் கூறுகையில், "சிறுவர்களிடம் வாகனங்கள் வழங்கினால் பெற்றோர்கள் மீது மோட்டார் வாகன சட்டப்பிரிவு 199 -Aன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in