Published : 03 Feb 2024 06:31 AM
Last Updated : 03 Feb 2024 06:31 AM

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: பிஎஸ்என்எல் அலுவலகத்தில் சிபிசிஐடி போலீஸார் ஆய்வு

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக திருச்சி மேலரண் சாலையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் நேற்று விவரங்களை சேகரிக்க வந்த சிபிசிஐடி போலீஸார். | படம்: ர.செல்வமுத்துகுமார் |

திருச்சி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகத்தில் உள்ள சர்வரில் இருந்து செல்போன் அழைப்புகள் தொடர்பான விவரங்களை சிபிசிஐடி போலீஸார் நேற்று சேகரித்தனர்.

நீலகிரி மாவட்டம் கோடநாடுஎஸ்டேட்டில் 2017-ல் காவலாளிஓம்பகதூர் கொலை செய்யப்பட்டு, பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் 8 செல்போன்கள் மற்றும் 5 சிம்கார்டுகளை சிபிசிஐடி போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில், திருச்சி மேலரண் சாலையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்துக்கு (தெற்கு மண்டல தகவல் சேகரிப்புமையம்) சிபிசிஐடி எஸ்.பி.மாதவன் தலைமையில் 7 அதிகாரிகள் மற்றும் குஜராத்தை சேர்ந்த 2 தடயவியல் நிபுணர்கள் என 10 பேர் கொண்ட குழுவினர் நேற்று வந்தனர். அங்கு, வழக்கில் தொடர்புடையவர்களின் செல்போன் அழைப்புகள் தொடர்பான விவரங்களை அவர்கள் சேகரித்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக மீட்கப்பட்ட 8 செல்போன்களில் இருந்து அழிக்கப்பட்ட படங்கள், குறுஞ்செய்திகள் உள்ளிட்டவை மீட்கப்பட்டுள்ளன. இவற்றை கோவை மண்டல தடயவியல் ஆய்வகம் 8 ஆயிரம் பக்கம் கொண்ட அறிக்கையாக தயாரித்து, ஆய்வு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x