

மயிலாடுதுறை: தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி, மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் திமுக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை.தொகுதிகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. கடந்த முறையைவிட தற்போது காங்கிரஸ் கட்சிக்கு அதிக தொகுதிகளை ஒதுக்குமாறு கேட்போம். மயிலாடுதுறை தொகுதியையும் கேட்போம்.
நாட்டில் 25 கோடி மக்களைவறுமையிலிருந்து மீட்டுவிட்டதாக பட்ஜெட்டில் கூறியுள்ளனர். இதற்கு என்ன ஆதாரம் உள்ளது? ராமர் கோயில் கட்டியதால் மட்டுமே மக்கள் பாஜகவுக்கு வாக்களித்து விடுவார்கள் என்று கருத முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.