சென்னை சேப்பாக்கத்தில் பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் அலுவலக கட்டிடம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்துவைத்தார்
சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பொதுப்பணித் துறை சென்னை மண்டல தலைமைப் பொறியாளர் அலுவலகக் கட்டிடம், மகளிருக்கான உணவுக்கூடம் உள்ளிட்டவற்றை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார்.
பொதுப்பணித் துறையில் முதன்மை தலைமைப் பொறியாளர் அலுவலகமும், சென்னை மண் டல தலைமைப் பொறியாளர் அலு வலகமும் ஒரே கட்டிடத்தில் செயல் பட்டு வந்தது. இதில், சென்னை மண்டல தலைமைப் பொறியாளர் அலுவலகத்துக்கு போதிய இடவசதி இல்லாததால், தனியாக கட்டிடம் கட்ட வேண்டும் என்று உத்தேசிக்கப்பட்டது.
ரூ.23 கோடியில் கட்டிடம்: இதையடுத்து, புதிய அலுவல கக் கட்டிடம் ரூ.23.05 கோடியில், 3 தளங்களுடன் 1,04,049 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. முதல் தளத்தில் தலைமைப் பொறியாளர் அறை மற்றும் அலுவலகங்கள், கோட்டப் பொறியாளர் அலுவல கங்களும், 2-ம் தளத்தில் தலைமை கட்டிடக் கலைஞர் அறை மற்றும் அலுவலகங்கள், நூலகம் மற்றும் கலந்தாய்வுக் கூடம், மூன்றாம் தளத் தில் கண்காணிப்புப் பொறியாளர் (திட்டம் மற்றும் வடிவமைப்பு) அறை மற்றும் அலுவலகங்கள், கூட்ட அரங்கு மற்றும் பிற கட்டிட கட்டுமான உப கோட்ட அலுவலகங்கள் அமைந் துள்ளன.
இந்தக் கட்டிடத்தை நேற்று, இளைஞர் நலத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை வகித்தார்.
மேலும், பொதுப்பணித் துறை வளாகத்தில் ரூ.70 லட்சத்தில் கட்டப் பட்டுள்ள, மகளிருக்கான உணவுக் கூடத்தையும் அமைச்சர் உதயநிதி திறந்துவைத்தார். இதுதவிர, இந்த வளாகத்தில் புதிதாக 10.5 அடிக்கு, 6.5 அடி அளவிலான மின்னணு திரையையும் அமைச்சர் உதயநிதி திறந்துவைத்தார்.
இந்த மின்னணு திரை மூலம் பொதுப்பணித் துறை யால் மேற்கொள்ளப்படும் அலு வலகக் கட்டிடங்கள், அரசு மருத்துவ மனைகள், அரசுப் பள்ளிகள், விளையாட்டுத் திடல்கள், நினை வகங்கள் போன்ற அரசு கட்டிட பணிகள் குறித்தவிவரங்கள் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் காட்சிப்படுத்தப்படும்.
ரூ.6.80 கோடியில் உபகரணங்கள்: தொடர்ந்து, சென்னை தரமணி பொதுப்பணித் துறை வளாகத்தில் ரூ.35 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள நுழைவாயிலையும் அமைச்சர் உதயநிதி திறந்துவைத்தார். துறையின் தரக்கட்டுப்பாட்டு கோட்டங்களுக்கு 20 வகையான ஆய்வக உபகரணங்கள், 20 வகையான கள ஆய்வு உபகரணங்கள் என 40 வகையான சிவில் உபகரணங் கள் மற்றும் 8 வகையான மின் உப கரணங்கள் ரூ.6.80 கோடி செலவில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த உபகரணங்கள் மூலம் கட்டுமானப் பொருட்களின் 45 வகையான பண்புகளை கண்டறிந்து, தரத்தை உறுதி செய்ய முடியும். மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து தரக்கட்டுப்பாட்டு கோட்டங்களின் பயன்பாட்டுக்காக ஆய்வக உபகரணங்களை, தரக் கட்டுப்பாட்டு பொறியாளர்களிடம் அவர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், பொதுப் பணித் துறைச் செயலர் பி.சந்திர மோகன், முதன்மைத் தலைமைப் பொறியாளர் கே.பி.சத்தியமூர்த்தி, சென்னை மண்டல தலைமைப் பொறியாளர் கே.ஆயிரத்தரசு இராஜசேகரன் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
