Published : 03 Feb 2024 06:06 AM
Last Updated : 03 Feb 2024 06:06 AM

நான்காம் கட்ட யுவசங்கம் திட்டத்தில் ஐஐடி உட்பட 22 நிறுவனங்கள் இணைப்பு: பல்கலைக்கழக மானியக் குழு தகவல்

சென்னை: யுஜிசியின் செயலர் மணீஷ் ஆர்.ஜோஷி, அனைத்து பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: இந்தியாவின் பல்வேறு மாநி லங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இடையே கலாச்சார பிணைப்புகளை வளர்ப்பதற்கும், தேசிய ஒருங்கிணைப்பை ஊக்கு விப்பதற்கும் ஏற்படுத்தப்பட்ட யுவ சங்கம் சுற்றுலாக்கள் நாடு முழுவதும் வரவேற்பை பெற்றுள்ளது. யுவசங்கம் திட்டத்தின் மூலம் இதுவரை 3 ஆயிரம் இளைஞர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள், 69 கலாச்சார சுற்றுப்பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் யுவசங்கம் 4-ம் கட்டத்துக்குள் தற்போது நுழைந்திருக்கிறது. இதில் இந்தியா முழுவதும் 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 22 உயர்கல்வி நிறுவனங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

இதில் தமிழகத்தில் இருந்துதிருச்சி ஐஐஐடி இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த உயர் கல்வி நிறுவனங்களின் துணைவேந்தர்கள் மற்றும் முதல்வர்கள் தங்களதுமாணவர்களையும், அந்தந்தப்பகுதியில் உள்ள இளைஞர் களையும் https://ebsb. aicte.india. org/ என்ற யுவசங்கத்தின் இணைய தளம் மூலம் கலாச்சார மற்றும் கல்வி சுற்றுலாக்களில் பங்கேற்கு மாறு ஊக்குவிக்க வேண்டும்.

https://drive.google.com/drive/u/0/folders/18fgAfxVSsfJdZX9MQiJ28LfYSSfJZCIo இணையதளத்தில் வழிகாட்டுதல்களை ஆராய்ந்து சுற்றுப் பயணங்களை திட்டமிடலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x