இணைய உலகில் பெண்கள் பாதுகாப்பு குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு

இணை ய உலகில் பெண்கள் பாதுகாப்பு என்ற தலைப்பில் எழும்பூரில் நடைபெற்ற கல்லூரி மாணவிகளின் விழிப்புணர்வு பேரணியை சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தொடங்கி வைத்தார். உடன் கூடுதல் காவல் ஆணையர் பி.கே.செந்தில் குமாரி. மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் ஸ்டாலின் உள்ளனர்.

Updated on
1 min read

இணைய உலகில் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை சென்னை, எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் நேற்று தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு : பெண்கள் பாதுகாப்புக்காக தமிழக அரசு அறிமுகப்படுத்திய “காவல் உதவி செயலி”, தற்காப்புப்பயிற்சி மற்றும் சைபர் குற்றம் குறித்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இதன்தொடர்ச்சியாக கல்லூரி மாணவிகள் இணைய உலகில் பெண்கள் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு உறுதிமொழி நேற்று எடுத்துக் கொண்டனர். இதுகுறித்த விளம்பர பதாகைகளை சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் வெளியிட்டார். பின்னர், விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

2,000 கல்லூரி மாணவிகள் கலந்து கொண்ட இப்பேரணி சென்னை, எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்திலிருந்து புறப்பட்டு, மாண்டியத் சாலை வழியாக சென்று எழும்பூர், அரசு அருங்காட்சியகத்தில் முடிவடைந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in