Published : 02 Feb 2024 06:15 AM
Last Updated : 02 Feb 2024 06:15 AM
சென்னை: மத்திய இடைக்கால பட்ஜெட், நாட்டின் வளர்ச்சிக்கு புத்துயிரூட்டும் பட்ஜெட்டாக அமைந்திருப்பதாக பாஜக, தமாகா, அமமுக ஆகிய கட்சிகள் வரவேற்றுள்ளன.
இதுகுறித்து அக்கட்சிகளின் தலைவர்கள் வெளியிட்ட அறிக்கை:
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: 2024-25-ம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட், 2047-ம் ஆண்டுக்குள் ஒருவளர்ந்த தேசத்துக்கான உறுதியான அடித்தளத்தின் மீதான இந்தியாவின் பாதைக்கு மற்றுமொரு எடுத்துக்காட்டாகும். ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகளின் நலனை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முழுமையான அணுகுமுறையை இடைக்கால பட்ஜெட் உயர்த்திக் காட்டியுள்ளது.
நாடு முழுவதும் சோலார் பேனல்களை அமைக்கும் திட்டத்தின் மூலம் ஒரு கோடி வீடுகளுக்குஒவ்வொரு மாதமும் 300 யூனிட் இலவச மின்சாரம், சாலைகள், ரயில்வே, விமானப் போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து, சுற்றுலா மற்றும் எரிசக்தித் துறைகளில் பொருளாதார வளர்ச்சிக்காக உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ.11 லட்சம் கோடி ஒதுக்கப் பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
மாநில அரசுகளை ஆதரிப்பதற்காக 50 ஆண்டுகால வட்டியில்லா கடனாக ரூ.75,000 கோடி ஒதுக்கீடு,2019-20-ம் ஆண்டு மாநிலங்களுக் கான மொத்த பரிமாற்றங்கள் ரூ.11.45 லட்சம் கோடியிலிருந்து ரூ.22.75 லட்சம் கோடியாக அதிகரித்திருப்பது ஆகியவை கூட்டாட்சி உணர்வை நிலைநிறுத்துவதில் மத்திய அரசின் அர்ப்பணிப் புக்கான சான்றுகளாகும்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: மத்திய இடைக்கால பட்ஜெட், நாட்டின் மக்களுக்கான, பொருளாதார வளர்ச்சிக்கான, பாதுகாப்புக்கான புத்துயிரூட்டும் பட்ஜெட்டாக அமைந்துள்ளது. இதில் இடம்பெற்றுள்ள சலுகைகள், திட்டங்கள் மக்கள் பாதுகாப்பையும், நாட்டின் பொருளாதாரத்தையும் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளன. இது சில மாதங்களுக்கான பட்ஜெட் என்பதால்அவை அனைத்தும் செயல்பாட்டுக்கு வர மத்திய அரசு முனைப்புடன் செயல்பட வேண்டும்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் பெண்களின் நலன் சார்ந்த திட்டங்களுக்கும், பெண்களின் வளர்ச்சிக்கும்முக்கியத்துவம் அளித்திருப்பது மகிழ்ச்சியையும், மனநிறைவை யும் தருகிறது.
அதேபோல சிறு நகரங்களுக்கு விமான சேவை தொடங்க 1,000 விமானங்கள் கொள்முதல், வந்தேபாரத் ரயில்களின் சேவை அதிகரிப்பு, கூடுதல் பேட்டரி சார்ஜ்நிலையங்கள் என போக்குவரத்துவளர்ச்சி தொடர்பான அறிவிப்பு களும் வரவேற்கத்தக்கது. இவ்வாறு அவர்கள் தெரிவித் துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT