ராமர் கோயில் கட்ட விரும்பினார் ஜெயலலிதா: டிடிவி.தினகரன்

ராமர் கோயில் கட்ட விரும்பினார் ஜெயலலிதா: டிடிவி.தினகரன்
Updated on
1 min read

மதுரை: அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் மதுரையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: மக்களவைத் தேர்தலுக்காக சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். உறுதியான பிறகு, கூட்டணி குறித்த விவரங்களை வெளியிடுவோம்.

தேர்தல் வெற்றி, தோல்விகளைத்தாண்டி ஓ.பன்னீர்செல்வத்துடன் அரசியல் ரீதியாக சேர்ந்து பயணிக்க முடிவு செய்துள்ளேன். நாட்டின் பிரதமரைத் தேர்வு செய்யும் கூட்டணியில் அமமுக இடம்பெறும். திமுககூட்டணியை பலமாக அமைத்தாலும், மக்கள் அவர்களுக்கு எதிராகத்தான் இருக்கிறார்கள்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டதை, மதங்களைத் தாண்டி அனைவரும் வரவேற்றுள்ளனர். இது மகிழ்ச்சியான விஷயம். அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்று ஜெயலலிதாவும் விரும்பினார்.

இவ்வாறு டிடிவி.தினகரன் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in