Published : 01 Feb 2024 06:16 AM
Last Updated : 01 Feb 2024 06:16 AM

கடலோர மாவட்டங்களில் புயல், அதிகனமழை எதிரொலி: நெல் உற்பத்தி குறைவால் அரிசி விலை உயர்வு

சென்னை: தமிழகத்தில் வழக்கமாக ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை அரிசி விலை குறைந்திருக்கும். அதன் பிறகு ஏறத்தொடங்கும். டிசம்பர், ஜனவரி மாதங்களில் நடைபெறும் அறுவடை மற்றும் நெல்வரத்து அதிகரிப்பு போன்ற காரணங்களால் அதன்பிறகு வரும் மாதங்களில் விலை குறையும்.

ஆனால் இந்த ஆண்டு டிசம்பர் இறுதி வாரத்திலும், ஜனவரி மாதமும் மூட்டைக்கு ரூ.50 முதல் ரூ.150 வரை விலை உயர்ந்துள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர் மற்றும் நெல், அரிசி வியாபாரிகள் சங்க தலைவர் டி.துளசிங்கம் கூறியதாவது: டிசம்பர் முதல் வாரத்தில் மிக்ஜாம் புயலால் வட கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றும் வீசியது. ராமநாதபுரம் மாவட்டத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் கடலோர மாவட்டங்களில் நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி அழிந்தன. இதனால் நெல் உற்பத்தி பாதிக்கப்பட்டு, அதன் வரத்து குறைந்து, நெல் விலை உயர்ந்துள்ளது. அரிசி ஆலைகளுக்கான மின்சார நிலைக் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. அதனால் இந்த ஆண்டு அரிசி விலை 26 கிலோ மூட்டைக்கு ரூ.50 முதல் ரூ.150 வரை உயர்ந்து,தரத்துக்கு ஏற்ப மூட்டை ரூ.1,080 முதல் ரூ.1,600 ஆக விற்பனையாகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x