Published : 31 Jan 2024 04:08 AM
Last Updated : 31 Jan 2024 04:08 AM
விழுப்புரம்: வாழ்க்கை இதமாக இருக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள். எப்போதும் உங்கள் மீது விமர்சனங்கள் வந்து கொண்டே இருக்கும். நீங்கள் என்னை எப்படி விமர்சித்தாலும் துவண்டு போகாமல், நான் முன்னேறிக் கொண்டே இருப்பேன் என்று ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.
‘ஏக் பாரத் ஷ்ரேஷ்ட பாரத்’ (EBSB) திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்க ளில் இருந்து 100 மாணவர்கள் ஒரு வார கால கல்வி - கலாச்சார சுற்றுப்பயணமாக ஆரோவில் வந்துள்ளனர். இந்த மாணவர்களிடையே, நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை நிலை ஆளுநர் தமிழிசை பங்கேற்றார்.
மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி அவர் கூறியது: மாணவர்களை சந்திப்பது எப்போதும் மகிழ்ச்சிதான். நான் பேராசிரியராக மருத்துவக் கல்லூ ரியில் பணியாற்றிய பின்னரே ஆளுநராக ஆனேன். ஒருமுறை ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது ஒருவர் என்னிடம், ‘இட ஒதுக்கீட்டின் மூலமாகத்தான் பெண்கள் முன்னேறி வருகிறார்கள்’ என்று கூறினார். அதற்கு நான், ‘பெண்ணாக இருப்பதால் எங்களுக்கு இந்த பதவி கொடுக்கவில்லை; ஆணை விட அதிக முறை உழைத்ததால் தான் இந்த நிலைக்கு வந்திருக்கிறோம்’ என்று தெரிவித்தேன். ஒரு பெண் ஒரு நிலையை அடைய வேண்டும் என்றால் ஆணை விட பல மடங்கு உழைக்க வேண்டியிருக்கிறது.
அன்மையில், இளைஞர்கள் கலந்து கொண்ட ஒரு மாநாட்டில் ஒருவர் என்னிடம், ஆளுநராக மாறியதற்கு பின்னால் இருக்கும் ரகசியத்தை கேட்டார். அதற்கு நான்மூன்று வழிமுறைகள் இருக்கின் றன என்று கூறினேன். ‘ஒன்று கடினஉழைப்பு, இரண்டு கடின உழைப்பு,மூன்று கடின உழைப்பு’ என்று கூறினேன். நாம் எப்போதும் நிறைய சிக்கல் களால் சூழப்பட்டிருக்கிறோம். இந்தஉலகம் போட்டியால் நிறைந்திருக் கிறது. அனைவரும் வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
நாங்கள் மாணவர்களாக இருக்கும் போது தொழில் நுட்பம் பெரிய வளர்ச்சி அடையவில்லை. தற்போது அதீத வளர்ச்சி பெற்றுள்ளது. தொழில் நுட்ப வளர்ச்சியானது இருமுனை கத்தியாக இருக்கிறது. சில நேரங்களில் நமக்கு நன்மையும் சில நேரங்களில் நமக்கு தீமையும் செய்யக் கூடியதாக இருக்கிறது. நேற்று முன்தினம் ‘பரிக்ஷா பே சர்ச்சா’ நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், ‘நம்மை அலைபேசிகள் எப்போதும் சூழ்ந்திருப்பதால் நாம் தனியாக இருப்பதற்கான நேரம் குறைவாக இருக்கிறது. ஆழ்ந்த உறக்கம் வேண்டும்’ என்று கூறினார். அது நாம் அனைவரும் கடை பிடிக்கப்பட வேண்டியது.
நான் சிறப்பாக பல்வேறு தருணங்களில் பேசியிருந்த போதிலும், என் உயரம் குறித்து விமர்சனங்கள் வந்துள்ளன. நான் உருவத்தில் குறைவாக இருக்கலாம்; ஆனால் என் திறமையின் மூலம் நான் உயரமானவள். வாழ்க்கை இதமாக இருக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள். எப்போ தும் உங்கள் மீது விமர்சனங்கள் வந்து கொண்டே இருக்கும். நீங்கள் என்னை எப்படி விமர்சித்தாலும் துவண்டு போகாதீர்கள். நான் விமர்சனங்களால் முன்னேறிக் கொண்டே இருப்பேன். நாம் அனைவரும் சாமானியர்கள் அல்ல; அசா தாரணமானவர்கள். அனைவரும் அனைத்திலும் தைரியத்துடன் இருக்க வேண்டும்.
திறமையின் மூலம் உங்களை நாள்தோறும் புதுப்பித்துக் கொண்டே இருங்கள். உங்களது மகிழ்ச்சியை எதற்காகவும் தொலைத்து விடாதீர்கள். மதிப் பெண்களை நினைத்து கவலை கொள்ளாதீர்கள். ‘இந்த உலகத்தில் அனைவரும் ஏதோ ஒரு திறமையுடன் பிறக்கி றார்கள்; இதனைக் கண்டறிவது மிக முக்கியம்’ என்று சுவாமி விவேகானந்தர் கூறுகிறார். உங்க ளிடம் ஆயிரம் திறமைகள் கொட்டிக் கிடக்கும். ‘தலையை குனிந்து நடக்காதீர்கள்; பாரதியார் கூறுவது போல நிமிர்ந்த நன்னடையோடு நேர்கொண்ட பாதையில் நடந்து செல்லுங்கள்’ என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT