

சென்னை: சென்னையை வரும் 2027-க்குள்தொழுநோய் இல்லாத மாவட்டமாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: காந்தியடிகள் நினைவு நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் "ஸ்பர்ஷ் (SPARSH) தொழுநோய் விழிப்புணர்வு முகாம் ஜன.30 முதல்பிப். 13-ம் தேதி வரை நடத்தப்படஉள்ளது. ஜன. 30-ம் தேதி (இன்று)மாவட்டம் முழுவதும் அனைத்துகல்வி நிலையங்கள், மாவட்ட,வட்ட மருத்துவமனைகள், அரசுஆரம்பச் சுகாதார நிலையங்கள்,மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் தொழுநோய் ஒழிப்பு தினம் அனுசரிக்கப்படும்.
இதைத் தொடர்ந்து 2 வாரங்களுக்கு தினசரி விழிப்புணர்வு கூட்டங்கள், தொழுநோய் கண்டுபிடிப்புமுகாம்கள், தோல் நோய் சிகிச்சைமுகாம்கள் செயல்படுத்தப்பட உள்ளன. வாரச்சந்தை கூடும் இடங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், தொழிற்சாலைகள் போன்ற இடங்களில் தொழுநோய் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட உள்ளது.
தொழுநோய் கூட்டு மருந்து சிகிச்சை மூலம் முற்றிலும் குணமாகக் கூடியது. இச்சிகிச்சை முற்றிலும் இலவசமாகக் கிடைக்கிறது. எந்த நிலையிலும் இந்நோயைகுணப்படுத்த முடியும்.
தற்போது தொழுநோய் பரவும்விகிதம் சென்னையில் 10 ஆயிரம்பேருக்கு 0.15 ஆக உள்ளது. இதை2027-ம் ஆண்டுக்குள் பூஜ்ஜியமாக்கி, தொழுநோய் இல்லாதமாவட்டமாக உருவாக்க அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றார்.