Published : 30 Jan 2024 04:14 AM
Last Updated : 30 Jan 2024 04:14 AM

சிதம்பரம் நடராஜர் கோயிலில் குடியரசு துணைத் தலைவர் தரிசனம்

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் குடியரசு துணைத் தலைவர் ஜெக தீப் தன்கர் தரிசனம் செய்தார். அவரது வருகையையையொட்டி 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் புதுச்சேரி மத்தியபல்கலைக்கழகத்தில் மாணவர்களு டன் கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்க நேற்று முன்தினம் மாலை புதுச்சேரிக்கு வந்திருந்தார். இந்நிகழ்வில் பங்கேற்ற அவர்,நேற்று காலை அரவிந்தர் ஆசிர மத்தில் வழிபட்டார். பின்னர் 9 மணியளவில் தன் குடும்பத்தினருடன் தனி ஹெலிகாப் டரில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக ஹெலிகாப்டர் இறங்கு தளத்துக்கு வந்தார்.

அவரை தமிழக அரசின் சார்பில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ. கணேசன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜூம் வரவேற்றார். இதைத் தொடர்ந்து அவர் கார் மூலம் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் சென்றார். பொது தீட்சிதர்கள் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர். கோயில் வாயிலில் இருந்து கோயிலில் உள்ள பிரதான 21 படி வரை பேட்டரி வாகனத்தில் சென்றார்.

அவரது மனைவி உள்ளிட்ட உறவினர்களும் உடன் சென்றனர். பின்னர் கோயில் கனக சபை மீது ஏறி தரிசனம் செய்தார். இதைத்தொடர்ந்து பரங்கிப் பேட்டையில் உள்ள பாபாஜி கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தார்.

அரவிந்தர் ஆசிரமத்தில் அன்னை, அரவிந்தர் நினைவிடத்தில் வணங் கும் குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர். உடன் ஆளுநர் தமிழிசை, அமைச்சர் சாய் ஜெ.சரவணன்குமார் உள்ளிட்டோர்.

2 மணி நேரம் காத்திருப்பு: குடியரசு துணைத் தலைவர் வருகையையொட்டி, சிதம்பரம் நடராஜர் கோயிலில் நேற்று காலை 7 மணி முதல் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. மேலும், முக்கிய சாலைப் பகுதியில் பொதுமக்களை போலீஸார் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக தடுத்து நிறுத்தி வைத்திருந்தனர். இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், அலுவலக பணிக்கு செல்வோர் கடும் அவதியடைந்தனர். போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டிருந்தது.

இதற்கிடையே, குடியரசு துணைத் தலைவர் புவனகிரி எல்லையம்மன் கோயிலுக்கு செல்வதாக இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. பின்னர் அவர் மதியம் 12 மணியளவில் ஹெலி காப்டர் மூலமாக புதுச்சேரி புறப்பட்டுச் சென்றார். அங்கிருந்து டெல்லி புறப்பட்டார். குடியரசுத் தலைவர் வருகையையொட்டி, வடக்கு மண்டல ஐ.ஜி கண்ணன் தலைமையில் சிதம்பரம், பரங்கிப்பேட்டை பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x