ஜல்லிக்கட்டு... தில்லு இருந்தா மல்லுக்கட்டு

‘கொம்பு வச்ச சிங்கம்டா ’.. வாடிவாசலில் இருந்து நாலுகால் பாய்ச்சலில் வெளியேறிய முரட்டுக் காளையை மிரட்சியுடன் பார்த்த வீரர்கள்.
‘கொம்பு வச்ச சிங்கம்டா ’.. வாடிவாசலில் இருந்து நாலுகால் பாய்ச்சலில் வெளியேறிய முரட்டுக் காளையை மிரட்சியுடன் பார்த்த வீரர்கள்.
Updated on
1 min read

தஞ்சாவூர் அருகே திருக்கானூர்பட்டியில் புனித அந்தோணியார் பொங்கலை முன்னிட்டு நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டை ஆட்சியர் தீபக் ஜேக்கப் தொடங்கிவைத்தார்.

உன்னை விடமாட்டேன்.. பிடிபடாமல் இருக்க உயரத்தில் துள்ளி திமிரும்
காளையை தாவி அடக்கும் வீரர்
உன்னை விடமாட்டேன்.. பிடிபடாமல் இருக்க உயரத்தில் துள்ளி திமிரும்
காளையை தாவி அடக்கும் வீரர்

இதில் தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 700 காளைகள் பங்கேற்றன.

தெறிக்கவிடலாமா.. நீங்க தனித்தனியா அவிழ்த்து விட்டாலும் நாங்க சேர்ந்து
வந்து மொத்த கூட்டத்தை யும் தெறிக்கவிடுவோம் என்கின்றனவோ இந்த காளைகள்?
படங்கள்: ஆர்.வெங்கடேஷ்
தெறிக்கவிடலாமா.. நீங்க தனித்தனியா அவிழ்த்து விட்டாலும் நாங்க சேர்ந்து
வந்து மொத்த கூட்டத்தை யும் தெறிக்கவிடுவோம் என்கின்றனவோ இந்த காளைகள்?
படங்கள்: ஆர்.வெங்கடேஷ்

350 மாடுபிடி வீரர்கள் களம் இறங்கினர். காளைகள் முட்டியதில் வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள், பார்வையாளர்கள் என 46 பேர் காயமடைந்தனர்.

திமில நீயும் தொட்டு பாரு.. திருச்சி அல்லித்துறையில் நேற்று நடைபெற்ற வடமாடு
மஞ்சுவிரட்டில் தன்னை அடக்க வந்த வீரர்களை நெருங்கவிடாமல் மிரட்டும் காளை.
திமில நீயும் தொட்டு பாரு.. திருச்சி அல்லித்துறையில் நேற்று நடைபெற்ற வடமாடு
மஞ்சுவிரட்டில் தன்னை அடக்க வந்த வீரர்களை நெருங்கவிடாமல் மிரட்டும் காளை.

2 காளைகளும் காயமடைந்தன. காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

ஓடிடுடா கைப்புள்ள .. திருச்சி மாவட்டம் கருங்குளத்தில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில்
.தன்னை முட்ட வந்த காளையிடம் இருந்து தப்பிச்செல்லும் மாடுபிடி வீரர்.
ஓடிடுடா கைப்புள்ள .. திருச்சி மாவட்டம் கருங்குளத்தில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில்
.தன்னை முட்ட வந்த காளையிடம் இருந்து தப்பிச்செல்லும் மாடுபிடி வீரர்.

இதேபோல, திருச்சி மாவட்டம் கருங்குளத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. அல்லித்துறையில் வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in