ராமேசுவரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய தேசிய காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத் தலைவர் மனோஜ்குமார்.
தமிழகம்
கதர் துறையில் தமிழகம் சிறப்பான வளர்ச்சி பெற்றுள்ளது: காதி ஆணையத் தலைவர் பாராட்டு
ராமேசுவரம்: காதி மற்றும் கிராமத் தொழில்ஆணையம் சார்பில் கதர் கைவினைஞர்கள் மற்றும் தொழிலாளர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி ராமேசுவரத்தில் நேற்று நடைபெற்றது.
ஆணையத்தின் மாநில இயக்குநர் சுரேஷ், மதுரைக் கோட்ட மேலாளர் அசோகன் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து தேசிய காதிமற்றும் கிராமத் தொழில் ஆணையத்தின் தலைவர் மனோஜ்குமார் பேசியதாவது:
கடந்த 9 ஆண்டுகளில் கதர்மற்றும் கிராமத் தொழில் பொருட்களின் வணிகம் ரூ.1.34 லட்சம்கோடியைத் தாண்டியுள்ளது.
தமிழகத்தில் கதர் துறை சிறப்பான வளர்ச்சியைப் பெற்றுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் கதர்,கிராமத் தொழில்கள் மூலம் தமிழகத்தில் ரூ.262 கோடிக்கு உற்பத்தியும், ரூ.466 கோடிக்குவிற்பனையும் நடைபெற்றுள்ளது. இதன் மூலம் 14,396 கைவினைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
