Published : 29 Jan 2024 06:10 AM
Last Updated : 29 Jan 2024 06:10 AM

மெட்ரோ ரயில் பணி காரணமாக ஆயிரம் விளக்கு ஒயிட்ஸ் சாலையில் போக்குவரத்து மாற்றம்

சென்னை ராயப்பேட்டை, ஒயிட்ஸ் சாலையில் நடைபெறும் மெட்ரோ பணிகள் காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. | படம்: எஸ்.சத்தியசீலன் |

சென்னை: ஆயிரம் விளக்கு பகுதியில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தினரால் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதை கருத்தில்கொண்டும், போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காகவும் நேற்று முதல் (28-ம் தேதி) ஒருவார காலத்துக்கு அந்த பகுதிகளில் போக்குவரத்து மாற்றத்தை அமல்படுத்தி உள்ளனர்.

பட்டுலாஸ் சாலை - ஒயிட்ஸ் சாலை சந்திப்பிலிருந்து ஒயிட்ஸ் சாலை - திரு.வி.க சந்திப்பு வரை வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. ராயப்பேட்டை மணிக்கூண்டில் இருந்து அண்ணாசாலை நோக்கி ஒயிட்ஸ் சாலையில் வரும் வாகனங்கள் பட்டுலாஸ் சாலை - ஒயிட்ஸ்சாலை சந்திப்பில் திரும்பவேண்டும். அண்ணாசாலையிலிருந்து ஸ்மித் சாலையில் வரும் வாகனங்கள் ஸ்மித்ரோடு - ஒயிட்ஸ் சாலைசந்திப்பில் வலதுபுறம் திரும்ப தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அண்ணா சாலையில் இருந்து வரும் வாகனங்கள் ஒயிட்ஸ் சாலை - திரு.வி.க சந்திப்பில் இருந்துபட்டுலாஸ் சாலை - ஒயிட்ஸ்சாலை சந்திப்பு வரை வழக்கம்போல் ராயப் பேட்டை மணிக்கூண்டுக்கு சென்றடையும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x