Published : 27 Jan 2024 06:19 AM
Last Updated : 27 Jan 2024 06:19 AM
ராமேசுவரம்: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 12 பேரை விடுதலை செய்து ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 13-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து 3 விசைப்படகுகளில் சங்கர், பாதுஷா, குமார், முருகன், சாம்ராஜ், பாலா, அஜித், துரை, நாகசாமி, பாலகிருஷ்ணன், ஜெயராஜ், ஜாக்சன் ஆகிய 12 மீனவர்கள், கடலுக்குச் சென்றனர்.
இந்நிலையில், அவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, இலங்கை கடற்படையினர் 12 மீனவர்களையும் கைது செய்தனர். இந்த வழக்கு ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி கஜநிதிபாலன், "இந்த மீனவர்கள் மீண்டும் இலங்கை எல்லைக்குள் மீன்பிடித்தால் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும்" என்ற நிபந்தனையின் அடிப்படையில், 12 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
மேலும், 3 விசைப் படகுகளின் உரிமையாளர்கள் வரும்மார்ச் 11-ம் தேதி ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார். விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் 12 பேரும், யாழ்ப்பாணத்தில் உள்ளஇந்திய துணைத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT