Published : 27 Jan 2024 06:10 AM
Last Updated : 27 Jan 2024 06:10 AM

பிரதமர் வருகை, குடியரசு தினம்; சோர்வு இன்றி அடுத்தடுத்து சிறப்பான பாதுகாப்பு பணி: சென்னை போலீஸாருக்கு ஆணையர் பாராட்டு

சென்னை: பொங்கல் பண்டிகை, பிரதமர் வருகை, குடியரசு தின விழா என அடுத்தடுத்து பாதுகாப்புப் பணிகளை சிறப்பாக மேற்கொண்ட சென்னை காவல் துறையினருக்கு ஆணையர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

‘கேலோ இந்தியா’ விளையாட்டுப் போட்டியை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி கடந்த 19-ம்தேதி சென்னை வந்தார். பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் 22,000 போலீஸார் ஈடுபட்டனர்.

பிரதமர் நிகழ்ச்சி நடைபெற்றஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், சென்னை விமான நிலையம், கிண்டி ஆளுநர் மாளிகை மற்றும் அடையாறு கடற்படை தளம்ஆகிய இடங்களிலும், அதன் சுற்றுப்புறங்களிலும், சென்னையில் செல்லும் வழித்தடங்களிலும், பலத்தபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, தீவிர சோதனைகள் மற்றும் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

முன்னதாக சென்னையில் உள்ளதங்கும் விடுதிகள், நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் விடுதிகளிலும் சோதனைகள் மேற்கொண்டு சந்தேக நபர்கள் மற்றும் அந்நிய நபர்கள் உள்ளனரா? என போலீஸார் கண்காணித்தனர். அதுமட்டுமல்லாமல் முக்கியசாலைகள் மற்றும் சந்திப்புகளில்தீவிர வாகன சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

இது தவிர,முக்கிய ரயில் நிலையங்கள், பேருந்து முனையங்களிலும் காவல் துறையினர் மூலம் பலத்தபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இறுதியில் பிரதமர் வருகைபாதுகாப்புப் பணி சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது.

இதேபோல், நேற்று நடைபெற்ற குடியரசு தின பாதுகாப்புப் பணிகளில் சென்னையில் 7,500 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். முன்னதாக கடந்த 17-ம்தேதி காணும் பொங்கல் கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் பல ஆயிரக்கணக்கானோர் கடற்கரை, பொழுதுபோக்கு மையங்களில் ஒரே தினத்தில் திரண்டிருந்தனர். அப்போது 15,500 போலீஸார், அவர்களுடன் 1500 ஊர் காவல் படையினரும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த 3 முக்கிய நிகழ்வுகளும் அடுத்தடுத்து நடைபெற்றாலும், போலீஸார் சோர்வடையாமல் சிறப்பாகப் பணியாற்றினர். இதனால்,எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை.

இதையடுத்து, சிறப்பாக பாதுகாப்புப் பணிகளைக் கட்டமைத்த கூடுதல் காவல் ஆணையர்கள் பிரேம் ஆனந்த் சின்ஹா (தெற்கு), ஆர்.சுதாகர் (போக்குவரத்து), அஸ்ரா கார்க் (வடக்கு) உட்பட அனைத்து போலீஸாருக்கும் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

முக்கிய சாலைகள், ரயில் நிலையங்கள், பேருந்து முனையங்களில் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x