Published : 27 Jan 2024 06:08 AM
Last Updated : 27 Jan 2024 06:08 AM

பதவி உயர்வு பெற்ற தலைமை ஆசிரியர்களின் பணி வரன்முறை பட்டியலை அனுப்ப வேண்டும்: பள்ளிக்கல்வித் துறை

சென்னை: அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றவர்களின் பணிவரன்முறை கருத்துரு பட்டியலை அனுப்ப பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்துமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

பள்ளிக்கல்வியில் 2019 ஜனவரி 1-ம் தேதி முன்னுரிமை அடிப்படையில் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுக்கு அதே ஆண்டு நவம்பர் 11-ம் தேதி கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதில் தகுதியான முதுநிலை ஆசிரியர்கள், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவிஉயர்வு வழங்கப்பட்டது.

அதன்பின் சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பாணையின் அடிப்படையில் கூடுதல் முன்னுரிமைப் பட்டியல் வெளியிடப்பட்டு, 2021 டிசம்பர் 31-ம் தேதி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு அளிக்கப்பட்டது.

வழிகாட்டு நெறிமுறைகள்: இவர்களை பணிவரன்முறை செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வழங்கப்பட்டுள்ளன. இதையடுத்து 2021 டிசம்பர் 31-ல் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களின் பணிவரன்முறை கருத்துருவை தயார் செய்து அனுப்ப வேண்டும்.கருத்துருவை மின்னஞ்சலில் அனுப்பிவிட்டு, தனது கையொப்பமிட்ட பிரதியை பள்ளிக் கல்வி இயக்குநரகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

இந்தப் பட்டியலில் எவர் பெயரும் விடுபடக்கூடாது. மேலும், பதவி உயர்வு பெற்ற தலைமைஆசிரியர் பெயர் ஏதேனும் விடுபட்டால் அதற்கான முழுபொறுப்பையும் சம்மந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலரே ஏற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x