Published : 26 Jan 2024 06:20 AM
Last Updated : 26 Jan 2024 06:20 AM
சென்னை: சென்னை ரயில்வே கோட்டம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: அதன்படி, சென்ட்ரலில் இருந்து திருத்தணிக்கு நாளை (ஜன.27) இரவு 7, 8:20 மணி ரயில்கள் அரக்கோணம் வரை இயக்கப்படும். சென்னை கடற்கரையில் இருந்து திருத்தணிக்கு மாலை 6:30 மணி ரயில் அரக்கோணம் வரை இயக்கப்படும்.
திருத்தணியில் இருந்து சென்ட்ரலுக்கு இரவு 9:45 மணி ரயில் அரக்கோணத்தில் இருந்து இயக்கப்படும். திருத்தணியில் இருந்து சென்ட்ரலுக்கு 28-ம் தேதி அதிகாலை 4:30 மணி ரயில் அரக்கோணத்தில் இருந்து இயக்கப்படும்.
திருத்தணியில் இருந்து அரக்கோணத்துக்கு நாளை (ஜன.27) இரவு 9:15, 11:15மணி ரயில்கள், அரக்கோணத்தில் இருந்து திருத்தணிக்கு 28-ம் தேதி அதிகாலை 4 மணி ரயில் ரத்து செய்யப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT