மார்ச் மாதம் இறுதிக்குள் குருப் - 2ஏ தேர்வு மதிப்பெண், தரவரிசை பட்டியல் வெளியீடு: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

மார்ச் மாதம் இறுதிக்குள் குருப் - 2ஏ தேர்வு மதிப்பெண், தரவரிசை பட்டியல் வெளியீடு: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு
Updated on
1 min read

சென்னை: குருப்-2 ஏ தேர்வுக்கான (நேர்முகத் தேர்வு அல்லாத பணிகள்) மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியல் மார்ச் மாதம் கடைசி வாரத்துக்குள் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது.

நகராட்சி ஆணையர், சார்-பதிவாளர், உதவி தொழிலாளர் ஆய்வாளர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பதவிகளில் உள்ள 5777 காலியிடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த குருப்-2, குருப்-2-ஏ மெயின் தேர்வு கடந்த ஆண்டு பிப்ரவரி 25-ம் தேதி நடத்தப்பட்டது. டிஎன்பிஎஸ்சி நடத்திய இத்தேர்வை 51,987 பேர் எழுதினர். தேர்வு முடிவுகள் ஜனவரி 11-ம் தேதி வெளியிடப்பட்டன.

சான்றிதழ் சரிபார்ப்பு: குருப்-2 பிரிவின் கீழ் வரும்நேர்முகத்தேர்வு கொண்ட பதவிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு 483 பேர் தேர்வுசெய்யப்பட்டு அவர்களின் பட்டியலும் வெளி யானது. அவர்கள் தங்கள் சான்றிதழ்களை ஆன்லைனில் பதி வேற்றம் செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டது. அவர்களில் தேவையான சான்றிதழ்களை பதிவேற் றம் செய்யாதவர்களுக்கு அப் பணிகளை செய்து முடிக்க ஜனவரி 27 வரை அவகாசம் வழங் கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குருப்-2ஏ தேர்வுக்கான (நேர்முகத் தேர்வு அல்லாத பணிகள்) மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியல் மார்ச் மாதம் கடைசி வாரத்துக்குள் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் ச.கோபால சுந்தரராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மார்ச் கடைசி வாரத்துக்குள்... குருப்-2 தேர்வு பதவிகளுக்கான முதல் மற்றும் 2-வது கட்ட நேர்முகத் தேர்வும், கலந்தாய்வும் முடிந்த பிறகு குருப்-2 ஏ நேர்முகத் தேர்வு அல்லாத பணிகளுக்கான மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியல் மார்ச் கடைசி வாரத்துக் குள் வெளியிடப்படும். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in