இண்டியா கூட்டணியின் வெற்றியில்தான் இந்தியாவின் எதிர்காலம்; பாஜகவும், அதிமுகவும் தோற்கடிக்கப்பட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் உறுதி

சென்னை மேற்கு மாவட்ட திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் சென்னை அமைந்தகரையில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வெள்ளி செங்கோல் பரிசாக வழங்கப்பட்டது. இதில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, எம்பிக்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, மேயர் பிரியா, திமுக மேற்கு மாவட்ட செயலாளர் நே.சிற்றரசு எம்எல்ஏக்கள் எஸ்.சுதர்சனம், த.வேலு, துணை மேயர் மகேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். படம்: ம.பிரபு
சென்னை மேற்கு மாவட்ட திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் சென்னை அமைந்தகரையில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வெள்ளி செங்கோல் பரிசாக வழங்கப்பட்டது. இதில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, எம்பிக்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, மேயர் பிரியா, திமுக மேற்கு மாவட்ட செயலாளர் நே.சிற்றரசு எம்எல்ஏக்கள் எஸ்.சுதர்சனம், த.வேலு, துணை மேயர் மகேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். படம்: ம.பிரபு
Updated on
2 min read

சென்னை: இண்டியா கூட்டணியின் வெற்றியில்தான் இந்தியாவின் எதிர்காலம் உள்ளது என்றும், பாஜகவும், அதிமுகவும் அனைத்து இடங்களிலும் தோற்கடிக்கப்பட வேண்டும்என்றும் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கநாள் பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

திமுக சார்பில், 141 இடங்களில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், சென்னை, அமைந்தகரை, செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில், திமுகமேற்கு மாவட்டம் சார்பில் மாவட்டச் செயலாளர் என்.சிற்றரசு தலைமையில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுபேசியதாவது:

தமிழகம் எத்தனையோ மொழிப்போர் களங்களைச் சந்தித்துள்ளது. எத்தனையோ மறவர்களை இக்களத்தில் இழந்துள்ளது. மொழிப்போர் களத்தில் அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாமல், தமிழ் அறிஞர்களும், சமயத்துறவிகளும் நின்றனர். உலகில் எந்த மொழிக்காகவும் இப்படியொரு போராட்டம் நடைபெற்றிருக்காது.

மொழிப் போராட்டத்துக்குப் பின், கடந்த 1967-ல் திமுக முதன்முதலாக ஆட்சியமைத்தது. அதன்பின்தான் தமிழாட்சி தமிழகத்தில் தொடங்கியது. அது தமிழராட்சியாகத் தொடர்கிறது. இன்று உலகம் முழுவதும் தமிழ்நாட்டு இளைஞர்கள் வலம்வர இந்த இருமொழிக் கொள்கைதான் காரணம்.

பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து தமிழ்மொழியைப் புறக்கணித்து, இந்தியைத் திணிக்கும் வேலையைச் செய்து வருகிறது. நாமும் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம். பாஜக அரசு இந்தி மொழியை திணிப்பதற்குக் காரணம், இந்தி பேசும் மக்களை ஏமாற்றத்தான். பாஜகவுக்கு அதிகம் வாக்களிப்பது வடமாநிலத்து மக்கள். ஆனால், குறைந்தபட்சம் இந்திபேசும் வடமாநிலங்களுக்காவது எந்த நன்மையாவது செய்துள்ளார்களா?

கரோனா காலத்தில் திடீரென ஊரடங்கு போடப்பட்டதால், ஊருக்கு பல கிமீ தூரம் நடந்தேசென்றனர். அப்போது பலர் தண்டவாளத்தில் நசுங்கி இறந்தனர். கரோனாவைவிட கொடியது பாஜக அரசு.

அந்த மக்களை தற்போது ராமர் கோயிலைக் காட்டி திசைதிருப்பப் பார்க்கின்றனர். பாஜக அரசை வடமாநில மக்கள் இனியும் நம்பத் தயாராக இல்லை. இந்த முறைவடமாநிலங்களிலும் பாஜக வெற்றிபெற முடியாது. இந்துக்களின் உண்மையான எதிரி பாஜக என்பதை அம்பலப்படுத்தும் பரப்புரையை எல்லோரும் செய்ய வேண்டும். இதை உறுதிமொழியாகவே ஏற்கவேண்டும். பாஜக தன்னைக் காப்பாற்ற மதத்தைக் கையில் எடுக்கிறது. நாம் இந்தியாவைக் காக்க பாஜகவின் தோல்விகளை, அவர்களின் தமிழ் விரோதப் போக்கை அம்பலப்படுத்துவோம்.

இத்தனை காலமும் பாஜகவுடன் இருந்து அவர்களின் மக்கள் விரோத செயல்களுக்கு ஆமாம் போட்டவர்தான் பழனிசாமி. ஜிஎஸ்டியை அனுமதித்து தமிழக நிதிநிலையை பாதாளத்துக்குத் தள்ளினார். நீட் தேர்வை அனுமதித்தார். அதனால்தான் மக்களால் புறக்கணிக்கப்பட்டார்.

பாஜகவுடன் சேர்ந்து அவரும், அதிமுகவும் சிறுபான்மை மக்களுக்குச் செய்த துரோகத்தை மறைத்து, இப்போது நாடகம் போடுகிறார். ஆனால், சிறுபான்மையின மக்கள் அவர் செய்த துரோகங்களை மறக்க மாட்டார்கள். நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவும், அதிமுகவும் எல்லா இடங்களிலும் தோற்கடிக்கப்பட்டாக வேண்டும்.

இண்டியா கூட்டணியின் வெற்றியில்தான் இந்தியாவின் எதிர்காலம் உள்ளது. இண்டியா கூட்டணி ஆட்சி உண்மையான கூட்டாட்சியாக அமையும். அத்தகைய ஆட்சியில் எல்லா மொழி, இன மக்களும் சமஉரிமை கொண்டவர்களாக வாழ்வார்கள்; வாழவைப்பார்கள், எல்லோருக்கும் எல்லாம் என்ற சமதர்மசமுதாயத்தை அமைக்கமொழிப்போர் தியாகிகளின் தியாகத்தின் மீது உறுதியெடுப்போம். வென்று காட்டுவோம். இவ்வாறு முதல்வர் பேசினார்.

இக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, வெள்ளி செங்கோல் பரிசாக வழங்கப்பட்டது.அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, எம்.பி.க்கள்தயாநிதிமாறன், கலாநிதி வீராசாமி,மாவட்டச் செயலாளர்கள் எஸ்.சுதர்சனம், வேலு, எம்எல்ஏ மோகன்,சென்னை மேயர் ஆர்.பிரியா, துணைமேயர் மு.மகேஷ்குமார் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in