

நான் சினிமா நட்சத்திரம் இல்லை; உங்கள் வீட்டு விளக்கு என ராமநாதபுரத்தில் நடிகர் கமல்ஹாசன் பேசினார்.
ராமேசுவரத்தில் அப்துல் கலாம் இல்லத்திலிருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கிய நடிகர் கமல்ஹாசன் பின்னர் ராமநாதபுரம் சென்றார்.
ராமநாதபுரத்தில் பேசிய கமல்ஹாசன், "இனி நான் சினிமா நட்சத்திரம் இல்லை; உங்கள் வீட்டு விளக்கு. இந்த விளக்கை ஏற்றிவைக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. கூட்டம் அதிகமாக இருப்பதைப் பார்த்து சற்று தயங்கினேன். யாருக்கும் எதுவும் நிகழ்ந்துவிடக்கூடாது என்ற அச்சம் நிலவியது. ஆனால், மேடையில் ஏறிய பின்னர் இப்படி ஒரு வாய்ப்பை நழுவவிடக் கூடாது என உணர்கிறேன். மக்கள் வெள்ளத்தில் நீந்திவந்த நான் இன்னும் பல இடங்களில் போராடி நீந்த வேண்டி இருக்கிறது" எனப் பேசினார்.