குடியரசு தின விழா தேநீர் விருந்து புறக்கணிப்பு ஏன்?- புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் விளக்கம்

புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் சிவா |  துணைநிலை ஆளுநர் தமிழிசை
புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் சிவா | துணைநிலை ஆளுநர் தமிழிசை
Updated on
1 min read

புதுச்சேரி: பாஜக தலைவர் போல் செயல்படுவதால் புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை தேநீர் விருந்தை புதுச்சேரி மாநில திமுக புறக்கணிக்க உள்ளதாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா தெரிவித்துள்ளார்.

இத தொடர்பாக சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற முக்கிய நாட்களில் மாநிலத்தின் தலைமை நிர்வாகி என்ற முறையில் துணைநிலை ஆளுநர் மக்கள் பிரதிநிதிகளை அழைத்து தேநீர் விருந்து அளிப்பது என்பது மரபு. அந்த மரபின் அடிப்படையில் கடந்த காலங்களில் நடைபெற்ற தேநீர் விருந்துகளில் நானும் திமுக சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்று உள்ளோம்.

ஆனால் சமீபகாலமாக புதுச்சேரி ஆளுநர் மாளிகை என்பது பாஜக கொடி கட்டாத அலுவலகமாகவும், ஆளுநர் தமிழிசை பாஜக தலைவர்போலும் செயல்படுகிறார். இச்செயல் அவர் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல என்று நாங்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டியும், அவர் தன் நிலையில் இருந்து மாறாமல் இருந்து வருகிறார். ஆகவே, துணைநிலை ஆளுநர் தமிழிசை விடுத்துள்ள குடியரசு தின விழா தேநீர் விருந்து அழைப்பை புதுச்சேரி மாநில திமுக புறக்கணிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in