Published : 04 Feb 2018 10:04 AM
Last Updated : 04 Feb 2018 10:04 AM

அதிமுகவில் இருந்து 113 பேர் நீக்கம்

முன்னாள் எம்எல்ஏ மகேந்திரன் உட்பட 113 பேர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் கே.பழனிசாமி ஆகியோர் கூட்டாக நேற்று வெளிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திருவள்ளூர் மேற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான செல்வகுமாரி அண்ணாதுரை, ஈரோடு மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட மாணவர் அணி செயலாளர் ஏ.சீனிவாசன், கருங்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்த 56-வது வட்டச் செயலாளர் பழமண்டி கே.பாலமுருகன் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகின்றனர்.

மதுரை புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த உசிலம்பட்டி நகர 21-வது வார்டு செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான இ.மகேந்திரன், ஏ.வெள்ளாளப்பட்டி பேரூராட்சி செயலாளர் ஏ.கே.உமாபதி, அலங்காநல்லூர் பேரூராட்சி எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் ஆர்.ராஜபிரபு உட்பட 113 பேர் கட்சிக்கு களங்கமும் அவப்பெயரும் ஏற்படும் வகையில் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகின்றனர். கட்சியினர் யாரும் இவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x