

பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் லஞ்சம் பெற்ற விவகாரத்தில் மூன்றாவதாக ஒருவர் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பணி நிரந்தரத்துக்காக உதவி பேராசிரியரிடம் ரூ.30 லட்சம் லஞ்சம் பெற்றதாக பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆ.கணபதியை லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று கைது செய்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில், தொலைதூர கல்வி மைய இயக்குனரும் துணைவேந்தர் கணபதியின் உறவினருமான மதிவாணனும் சேர்க்கப்பட்டுள்ளார். மூன்று பேரில் இருவர் ஏற்கெனெவே கைது செய்யப்பட்டுவிட்ட நிலையில்.
மதிவானனிடம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்துகிறது.
முன்னதாக நேற்று, பல்கலைக்கழக உதவி பேராசிரியர் ஒருவரது தகுதிகாண் காலத்தை நிறைவு செய்வதற்காக ரூ.30 லட்சம் லஞ்சமாக பெற்றதாக துணைவேந்தர் கணபதியை கைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவர் மீது வழக்குப் பதிவு செய்தது. இதற்கு உடந்தையாக இருந்ததாக பல்கலைக்கழக வேதியியல்துறை பேராசிரியர் தர்மராஜ் என்பவரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்நிலையில், தற்போது மூன்றாவதாக ஒருவர் இவ்வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார்.