Published : 23 Jan 2024 04:12 AM
Last Updated : 23 Jan 2024 04:12 AM
வேலூர்: அணைக்கட்டு ஊராட்சி ஒன்றி யத்தில் நடைபெறும் கனிமவள கொள்ளை தொடர்பாக அதிமுக வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அதிமுகவினருக்கு எதிராக ரூ.200 கோடி மதிப்பிலான கனிமவள கொள்ளை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திமுகவினர் அளித்த புகாரால் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
அணைக்கட்டு ஊராட்சி ஒன்றி யத்துக்கு உட்பட்ட பகுதிகளில் திமுகவினரால் நிகழ்த்தப்படும் மணல் மற்றும் மண் கொள்ளையை கட்டுப்படுத்த தவறியது, மலைவாழ் மக்களுக்கு போதிய மருத்துவ வசதிகளை ஏற்படுத்த தவறியதை கண்டித்தும் திமுகவினரின் சட்ட விரோத நடவடிக்கை களை தடுத்து நிறுத்தவும் மலைவாழ் மக்களுக்கான மருத்துவ வசதிகளை உடனடியாக ஏற்படுத் தித்தர வேண்டும் என்பதை வலியுறுத்தி வேலூர் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக் கப்பட்டது.
அணைக்கட்டு பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அதிமுக வேலூர் புறநகர் மாவட்டச் செயலாளர் வேலழகன் தலைமை தாங்கினார். இதில், முன்னாள் அமைச்சரும் அதிமுக துணை பொதுச் செயலாளருமான கே.பி.முனிசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் கே.பி.முனுசாமி பேசும்போது, ‘‘திமுக எப்போது ஆட்சிக்கு வந்தாலும் ஆட்சிக் கட்டிலில் ஏறிய உடனே ஒவ் வொரு மாவட்டத்திலும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவது தான் திமுகவின் கலை. அதிமுக ஆட்சியில் இருந்தால் சாராயம், சூதாட்டம், சட்டத்துக்கு மாறான மணல், மண் கொள்ளை இருக்காது.
திமுக ஆட்சிக்கு வந்த ஒன்றரை ஆண்டுகளில் ரூ.30 ஆயிரம் கோடி கொள்ளையடித்து விட்டார்கள் என அமைச்சர் ஒருவரே கூறு கிறார். பாலாற்றில் மணல் கொள்ளையில் ஈடுபடுவதை தடுக்க பொதுச்செயலாளர் ஆர்ப்பாட் டத்தை அறிவித்தார். ஆனால், எங்கள் மீது குற்றச்சாட்டு சொல்லி போஸ்டர் ஒட்டி, கட்-அவுட் வைப்பது உங்களை நீங்களே தரம் தாழ்த்திக் கொள்கிறீர்கள், ஏமாற்றிக் கொள்கிறீர்கள்’’ என்றார்.
திமுக போஸ்டரால் சலசலப்பு: முன்னதாக, அதிமுகவின் ஆர்ப்பாட்ட அறிவிப்புக்கு எதிராக புறநகர் மாவட்ட அதிமுக செய லாளர் வேலழகன் குறித்து போஸ்டர்கள் அணைக்கட்டு, ஒடுக்கத்தூர் பகுதிகளில் திமுகவினர் ஒட்டிய சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது. அதில், ‘‘அணைக்கட்டு ஒன்றியம் கரடிகுடி ஊராட்சியில் அதிமுக ஆட்சியில் பினாமி பெயரில் சட்ட விரோதமாக கல் குவாரியில் கிராவல் மண், மண் கடத்தல் மற்றும் அங்காள பரமேஸ்வரி கோயில் இடத்திலும் பல கோடி ரூபாய்க்கு கிராவல் மண் கற்களை திருடி விற்பனை செய்த அதிமுக புறநகர் மாவட்டச் செயலாளர் வேலழகன் கடந்த 3 மாதங்களாக தினசரி 100 லோடு வீதம் கிராவல் மண் திருடியதை மறைக்க எதற்கு திமுவினர் மீது பழி சுமத்தி போராட்ட நாடகம்’’ என குறிப்பிட்டுள்ளனர்.
ரூ.200 கோடி கனிமவள கொள்ளை: அணைக்கட்டில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அதே நேரத்தில் திமுகவினர் ஒட்டிய போஸ்டர்களுக்கு ஆதர வாக கரடிகுடி கிராமத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளிக்க திரண்டனர். திமுக நிர்வாகிகள் தலைமையில் வந்த பொது மக்களிடம் இருந்து மாவட்ட ஆட்சியர் குமார வேல் பாண்டியன் நேரடியாக மனுக்களை பெற்றுக் கொண்டார்.
அம்மனுவில், ‘‘கரடிகுடி கிராமத்தில் உள்ள தனியார் மற்றும் அரசுக்கு சொந்தமான நிலங்களில் முனுசாமி (வேலழகனின் பினாமி), நடராஜன், சுமதி, பாலசந்தர், வெங்கடேசன், முருகன், சிவக்குமார் ஆகியோர் கல் குவாரி குத்தகைக்கு எடுத்து இரவு, பகல் என பார்க்காமல் வெடி வைத்து தகர்த்து சட்ட விரோதமாக கடத்தி வருகின்றனர். மேலும், காலாவதியான உரிமத்தை வைத்துக் கொண்டு சட்ட விரோதமாக கனிம வளங்களை சூறையாடி வருவதுடன் இதுவரை ரூ.200 கோடி அளவுக்கு கனிமவள கொள்ளை நடைபெற்றுள்ளது. எனவே, மேற்படி நபர்களின் குவாரிகளை தடை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளனர்.
அணைக்கட்டு பகுதியில் தொடர்ந்து நடைபெறும் கனிமவள கொள்ளை தொடர்பாக திமுக-அதிமுகவினர் ஒருவரை ஒருவர் மாறி மாறி புகார் தெரிவித்து தங்கள் அரசியலை செய்து வருவது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT