Published : 22 Jan 2024 05:55 AM
Last Updated : 22 Jan 2024 05:55 AM
சென்னை: அயோத்தி ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை விழாவையொட்டி அனைவரின் வீடுகளிலும் தீபம் ஏற்றிக் கொண்டாடுவோம் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அயோத்தி ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை விழா நிகழ்ச்சியையொட்டி, நாட்டு மக்கள்அனைவரும் குழந்தை ராமரைவரவேற்று தரிசிக்கத் தயாராகிவருகின்றனர். மடாதிபதிகளும்பல ஆன்மிக பெரியோர்களும்ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை வரவேற்றுள்ளனர். ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சியை வரவேற்கும் விதமாக தமிழகம் முழுவதும் தங்களது இல்லங்களில் கோலமிட வேண்டும். குடும்பத்துடன் அமர்ந்து ஸ்ரீராம ஜெயம் மந்திரத்தை ஜெபிக்க வேண்டும்.
500 ஆண்டுக்கால இந்துக்களின் எழுச்சி போராட்டத்துக்குப் பிறகு இந்த தீர்வு கிடைத்துள்ளது. அனைவரும் ஒன்றுசேர்ந்து இந்த ஆன்மிக எழுச்சி தினத்தை உள்ளுணர்வோடு ஒன்றுபட்டு அனைவர் வீடுகளிலும் மாலை கார்த்திகை தீபம்போல் அகல் விளக்குகளில் தீபமேற்றி ஒளி வெள்ளத்துடன், ராமரைப் போற்றி வணங்குவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT