

சென்னை: பொங்கல் விழாவையொட்டி தமிழகத்தில் ரூ.673 கோடிக்கு மது விற்பனை நடந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பொங்கல் விழாவை முன்னிட்டு கடந்த ஜன.14 முதல் 17-ம்தேதி வரை (16-ம் தேதி திருவள்ளுவர் தினம் விடுமுறை) 3 நாட்களில்,டாஸ்மாக் கடைகளில் ரூ.673 கோடிக்கும் அதிகமாக மதுபானங்கள் விற்பனையாகி இருப்பதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, மதுரை மண்டலத்தில் அதிகபட்சமாக 3 நாட்களில் ரூ.140.60 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி இருப்பதாகவும், அடுத்தபடியாக சென்னை மண்டலம் ரூ.136.93 கோடி, திருச்சி மண்டலம் ரூ.135.40கோடி, சேலம் மண்டலம் 131.10 கோடி, கோவை மண்டலம் 128.68 கோடிக்கு மது விற்பனை நடத்திருப்பதாக கூறப்படுகிறது.