Published : 21 Jan 2024 08:46 AM
Last Updated : 21 Jan 2024 08:46 AM

ராம நவமி, சிவராத்திரி பண்டிகைகளுக்கு பொது விடுமுறை அளிக்க உத்தரவிட முடியாது: உயர் நீதிமன்றம் மறுப்பு

சென்னை: ராம நவமி, சிவராத்திரி பண்டிகைகளுக்கு பொது விடுமுறை அளிக்க உத்தரவிட முடியாது என உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கடலூரை சேர்ந்த அர்ஜூனன் இளையராஜா என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘ராம நவமிமற்றும் சிவராத்திரி போன்ற முக்கியமான இந்து பண்டிகைகளுக்கும்பொது விடுமுறை அளிக்க மத்தியஅரசுக்கு உத்தரவிட வேண்டும்.

ஏனெனில் இந்த பண்டிகைகளை இந்தியாவில் உள்ள பெரும்பாலான இந்துக்கள் கொண்டாடுகின்றனர். எனவே இந்துக்களின் மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்த பண்டிகைகளுக்கு பொது விடுமுறை அளிக்க மத்திய அரசுக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை’ என கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபுர்வாலா, நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, ராம நவமி, சிவராத்திரி போன்ற பண்டிகைகளுக்கு பொதுவிடுமுறை அளிக்க வேண்டுமென மத்திய அரசுக்கு உத்தரவிட முடியாது என மறுப்பு தெரிவித்தனர். மேலும், மனுதாரர் தனது கோரிக்கை குறித்து மத்திய அரசை மீண்டும் அணுகலாம், எனக்கூறி வழக்கை முடித்து வைத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x