மின்வாரியத்தில் லஞ்ச புகார் விசாரணை முடியும் முன் பணியிடை நீக்கம் கூடாது: ஐஜி பிரமோத் குமார்

மின்வாரியத்தில் லஞ்ச புகார் விசாரணை முடியும் முன் பணியிடை நீக்கம் கூடாது: ஐஜி பிரமோத் குமார்
Updated on
1 min read

சென்னை: லஞ்சப் புகாரில் சிக்கிய மின்வாரிய அதிகாரிகளை விசாரணை முடியும்முன் பணியிடை நீக்கம் செய்யக் கூடாது என தமிழ்நாடு மின் உற்பத்திமற்றும் பகிர்மானக் கழக லஞ்ச ஒழிப்பு பிரிவு ஐஜி பிரமோத் குமார்அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அனைத்து மேற்பார்வை பொறியாளர்கள் உள்ளிட்டோருக்கு அவர் அனுப்பிய சுற்றறிக்கை:

லஞ்சப் புகாரில் சிக்கிய மின்வாரிய அதிகாரிகளிடம் விசாரணையை முழுவதுமாக முடிக்கும் முன்னரே அவர்களை பணியிடை நீக்கம் செய்யுமாறு மேற்பார்வை பொறியாளர்களிடம் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அறிவுறுத்துவதாகத் தெரிகிறது. மின்வாரிய ஐஜி.யின் ஒப்புதலின்றி இவ்வாறு செய்வது சட்டத்தை மீறும் செயலாகும். எனவே, இதுபோன்ற லஞ்சஒழிப்பு அதிகாரிகளின் வேண்டுகோளை கள அதிகாரிகள் ஏற்க வேண்டாம்.எழுத்துப்பூர்வமாக மின்வாரிய ஐஜியின் ஒப்புதல் பெறப்பட்டால் மட்டுமேவிசாரணை முடியும் முன் பணியிடை நீக்கம் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

அதேநேரம், இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட வேண்டாம்என லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. மீறுவோர்மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த அறிவுறுத்தல்களை தலைமைப் பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வைப் பொறியாளர்கள் உடனடியாகக் கடைபிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in