Published : 19 Jan 2024 04:00 AM
Last Updated : 19 Jan 2024 04:00 AM

சென்னை மருத்துவமனைகளில் ஆதரவற்ற சடலங்கள் தேக்கம்

சென்னை: விபத்துகளிலும், சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றவர்கள் உடல் நலக்குறைவாலும் இறப்பவர்களின் உடல்களை அடையாளம் கண்டு அவர்கள் குடும்பத்தினரிடம் போலீஸார் ஒப்படைக்கின்றனர்.

அடையாளம் காண முடியாத உடல்கள் மற்றும் ஆதரவற்ற சடலங்கள் அரசு மருத்துவமனைகளில் பிரேதப் பரிசோதனை கூடங்களில் வைக்கப் படுகின்றன. 15 முதல் 30 நாட்கள் வரை சடலங்களை அடையாளம் காண முடியவில்லை என்றாலும் அல்லது யாரும் தேடி வராத நிலையிலும் அறக்கட்டளை உதவியுடன் போலீஸார் சடலங்களை நல்லடக்கம் செய்கின்றனர்.

இந்நிலையில், தீபாவளி பண்டிகை பாதுகாப்பு, மழை வெள்ள பாதிப்பு மீட்புப் பணிகள், புத்தாண்டு, பொங்கல், கேலோ இந்தியா விளையாட்டு போட்டி பாதுகாப்பு பணிகளில் சென்னை போலீஸார் ஓய்வின்றி பணியாற்றி வருவதால், சென்னை அரசு மருத்துவமனைகளில் 70-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற மற்றும் அடையாளம் தெரியாத சடலங்கள் 2 மாதங்களாக தேக்கமடைந்துள்ளதாக தெரிகிறது.

இது குறித்து மருத்துவமனை ஊழியர்கள் கூறியதாவது: சென்னை அரசு மருத்துவமனைகளில் வாரத்துக்கு 5 முதல் 8 அடையாளம் தெரியாத மற்றும் ஆதரவற்ற சடலங்கள் வருகின்றன. 2 மாதங்களாக போலீஸார் பல்வேறு பணிகளில் பிஸியாக இருப்பதால், அரசு மருத்துவமனைகளில் சடலங்கள் தேங்கி வருகின்றன. நிலைமை இப்படியே சென்றால், 100 சடலங்கள் வரை தேங்கும் நிலை உருவாகும். எனவே, 2 மாதங்களாக பாதுகாக்கப்படும் சடலங்களையாவது போலீஸார் அடக்கம் செய்ய முன்வர வேண்டும் என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x