அதிமுக கொடி ஏற்றுவதில் பிரச்சினை: பெரியகுளத்தில் இபிஎஸ் - ஓபிஎஸ் அணியினர் மோதல்

பெரியகுளத்தில் அதிமுக கொடியேற்றும்போது தகராறில் ஈடுபட்ட இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அணியினர்.
பெரியகுளத்தில் அதிமுக கொடியேற்றும்போது தகராறில் ஈடுபட்ட இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அணியினர்.
Updated on
1 min read

பெரியகுளம்: பெரியகுளத்தில் அதிமுக கொடி ஏற்றுவதில் ஏற்பட்ட பிரச்சினை யால் இபிஎஸ், ஓபிஎஸ் அணியினர் இடையே மோதல் ஏற்பட்டது.

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்தநாளையொட்டி பெரியகுளம் பழைய பேருந்து நிலையம் அருகே அதிமுக சார்பில் கொடியேற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதிமுக நகரச் செயலாளர் பழனியப்பன், ஒன்றியப் பொறுப் பாளர் அன்னப்பிரகாஷ் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். கிழக்கு மாவட்டச் செயலாளர் முருக்கோடை ராமர் தலைமையிலான கட்சியினர் அங்கு கொடியேற்ற வந்தனர். அப்போது ஓ.பன்னீர் செல்வம் அணியைச் சேர்ந்த சிலர் கட்சிக் கொடியை ஏற்றினர்.

இதற்கு அதிமுகவினர் கடும் ஆட்சேபம் தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடு பட்டனர். கட்சிக்கும், கொடிக்கும் ஓபிஎஸ் சொந்தம் கொண்டாட முடியாது என்று அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் எதிர் தரப்பினரோ இக்கொடிக் கம்பம் ஓபிஎஸ் சார்பில் நடப்பட்டது. ஆகவே, நாங்கள் தான் கொடியேற்றுவோம் என்று கூறினர். பிரச்சினை முற்றியதில் இரு தரப்புக்குமிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டு மோதல் ஏற்பட்டது.

கொடிக்கம்பத்தில் ஓபிஎஸ் அணியினரால் ஏற்றப்பட்ட கொடியை இறக்கிய அதிமுக-வினர், மீண்டும் கொடியை ஏற்றினர். இரு தரப்பினரும் தொடர்ந்து கோஷம் எழுப்பியதால் காவல் துறையினர் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக பெரியகுளம் காவல் நிலையத்தில் அதிமுகவினர் புகார் அளித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in