

மதுரை: புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டி நேற்று கோலாகலமாக நடந்தது. இப்போட்டியில் 14 காளைகளை அடக்கிய வீரர் பிரபாகரனுக்கும், சிறந்த காளையாக தேர்வான புதுக்கோட்டை மாவட்டம்`சின்னக் கருப்பு' காளைக்கும் முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது.
பொங்கல் பண்டிகையை யொட்டி பாலமேட்டில் நேற்று ஜல்லிக்கட்டுப் போட்டி கோலாகலமாக நடைபெற்றது. பாலமேடு மஞ்சமலை ஆற்றுத் திடலில் அமைக்கப்பட்ட வாடிவாசலில் தமிழக அரசும்,பாலமேடு கிராமப் பொது மகாலிங்கமடத்துக் குழுவும் இணைந்து இந்தப்போட்டியை நடத்தின.
மதுரை மட்டுமல்லாது தேனி,திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர் உட்பட தமிழகம் முழுவதும் உள்ள சிறந்த காளைகள் இந்தப் போட்டியில் பங்கேற்றன. போட்டியில் பங்கேற்க 3,677 காளைகளும்1,412 மாடுபிடி வீரர்களும் ஆன்லைனில் பதிவு செய்திருந்தனர்.
அதில், 1000 காளைகளும், 600மாடுபிடி வீரர்களும் தேர்வு செய்யப்பட்டனர். காலை 7 மணியளவில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் மாடுபிடி வீரர்கள் உறுதி மொழி ஏற்றனர். அதன் பிறகு, வணிகவரித் துறை அமைச்சர் பி.மூர்த்திகொடியசைத்து போட்டியைத் தொடங்கி வைத்தார். மதுரைஎம்.பி சு.வெங்கடேசன், சோழவந்தான் எம்எல்ஏ வெங்கடேசன், மடத்து குழுத் தலைவர் மலைச்சாமி,செயலாளர் பிரபு, பொருளாளர் ஜோதி தங்கமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முதலில் பாலமேடு கிராமப் பொது மகாலிங்க மடத்துக் காளைஉட்பட பல்வேறு கோயில் காளைகள் வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன. அதைத்தொடர்ந்து, மாடுபிடி வீரர்கள் அடக்குவதற்காக ஒன்றன்பின் ஒன்றாக காளைகள் அவிழ்த்துவுிடப்பட்டன. போட்டி மொத்தம் 10 சுற்றுகளாக நடந்தன. ஒவ்வொரு சுற்றிலும் அதிககாளைகளைப் பிடிக்கும் வீரர்கள் அடுத்த சுற்றில் விளையாட அனு மதிக்கப்பட்டனர்.
10 சுற்றுகள் நடந்த போட்டியில் 14 காளைகளை அடக்கிய மதுரை மாவட்டம் பொதும்பு கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் சிறந்த மாடுபிடி வீரராகத் தேர்வானார். இவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் அமைச்சர் பி.மூர்த்தி காரை பரிசாக வழங்கினார். மேலும், மதுரை முனிச்சாலை பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவனம் மோட்டார் சைக்கிளை பரிசாக வழங்கியது.
11 காளைகளை அடக்கிய அலங்காநல்லூர் அருகே சின்னப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தமிழரசனுக்கு சோழவந்தான் எம்எல்ஏ வெங்கடேசன் சார்பில் மோட்டார் சைக் கிள் பரிசாக வழங்கப்பட்டது.
சிறந்த காளையாக புதுக்கோட்டை மாவட்டம் ராய வயல் கிராமத்தைச் சேர்ந்த மருதுபாண்டி என்பவரின் `சின்னக்கருப்பு' காளை சிறந்த காளையாக தேர்வானது. இந்தக் காளைக்கு அமைச்சர் உதயநிதி சார்பில் கார் பரிசாக வழங்கப் பட்டது.
தேனி மாவட்டம் கோட்டூரைச் சேர்ந்த அமர்நாதன் என்பவரின் காளை சிறந்த 2-வது காளையாக தேர்வானது. இந்த காளைக்கு அலங்காநல்லூர் பொன்குமார் சார்பில் கன்றுடன் கூடிய நாட்டினப் பசு மாடு பரிசாக வழங்கப்பட்டது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போட்டி விறுவிறுப்பாக நடந்தது. பார்வையாளர்களும் வீரர்களுக்கு உற்சாகமூட்டினர்.
தென்மண்டல ஐஜி நரேந்திரன் நாயர் தலைமையில் எஸ்பி.க்கள்பிரவீன் உமேஷ் (மதுரை), சிவபிரசாத் (தேனி) மற்றும் டிஎஸ்பி.க்கள் அடங்கிய 3,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ஜல்லிக்கட்டுப் போட்டியால் பாலமேடு கிராமம் திருவிழாக் கோலம் பூண்டிருந்தது.