அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு 3 நாள் சிறப்பு சுற்றுலா: சுற்றுலாத் துறை சார்பில் சிறப்பு ஏற்பாடு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு 3 நாள் சிறப்பு சுற்றுலா: சுற்றுலாத் துறை சார்பில் சிறப்பு ஏற்பாடு
Updated on
1 min read

சென்னை: மதுரை அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளைகாண சுற்றுலாத் துறை சார்பில் 3 நாள் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், வரும் 16-ம் தேதி இரவு 8.30 மணிக்கு சென்னை வாலாஜா சாலையில் இருந்து சுற்றுலாப் பேருந்து புறப்பட்டு, மறுநாள் காலை மதுரை சென்றடையும்.

வரும் 17-ம் தேதி காலை 9 மணிக்கு அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண சுற்றுலாப் பயணிகள் அழைத்து செல்லப்படுவார்கள். அங்கு சுற்றுலாப் பயணிகளுக்கு பிரத்யேக இருக்கை வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அன்று மாலை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்யவும் பயணிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

பின்னர் ஜன.18-ம் தேதி காலை அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் மற்றும் பழமுதிர்ச் சோலை முருகன் கோயில்களில் சுவாமி தரிசனத்துக்கு பயணிகள் அழைத்து செல்லப்படுவர். பிறகு அங்கிருந்து புறப்பட்டு இரவு 10 மணிக்கு சுற்றுலாப் பேருந்து சென்னை வந்தடையும்.

இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில், பொதுமக்கள் திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள சுற்றுலாத் துறை அலுவலகத்தில் நேரிலோ அல்லது www.tamilnadutourism.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ பதிவு செய்துகொள்ளலாம் என சுற்றுலாத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in