அனைவரும் பங்கேற்கும் வகையில் ஜன.26 குடியரசு தினத்தன்று கிராம சபை நடத்த வேண்டும்: மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்

அனைவரும் பங்கேற்கும் வகையில் ஜன.26 குடியரசு தினத்தன்று கிராம சபை நடத்த வேண்டும்: மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: குடியரசு தினத்தன்று கிராம சபைக் கூட்டத்தில் அனைத்து கிராம மக்களும் பங்கேற்கும் வகையில் தெரியப்படுத்த வேண்டும் என்று ஆட்சியர்களுக்கு ஊரக வளர்ச்சி இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு, ஊரக வளர்ச்சி இயக்குனர் பா.பொன்னையா அனுப்பியுள்ள கடிதம்: குடியரசு தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடத்தப்பட வேண்டும். கிராம சபைக் கூட்டத்தை ஊராட்சி எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி, ஜன.26ம் தேதி காலை 11 மணிக்கு நடத்த வேண்டும். குறைவெண் வரம்பின்படி உறுப்பினர்கள் வருகை இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் அனைத்து கிராம மக்களும் ஆர்வத்துடன் கிராமசபை கூட்டங்களில் பங்கேற்க ஏதுவாக கிராம சபை கூட்டம் நடைபெற உள்ள இடம், நேரம் ஆகியவற்றை தெரியப்படுத்த வேண்டும். கிராம சபைக்கூட்டம் மதச்சார்புள்ள எந்த ஒரு வளாகத்திலும் நடத்தக்கூடாது. கூட்டம் நடைபெறும் இடத்தை முன்கூட்டியே கிராம மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in