

சென்னை: அதிமுக மாணவரணி சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் ஜன.25-ம் தேதி வீரவணக்க நாள்பொதுக்கூட்டம் நடைபெற உள்ளன. இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தி மொழித் திணிப்பை எதிர்த்து மொழிப் போராட்டத்தில் உயிர் நீத்த மொழிப் போர்த் தியாகிகளை நினைவுகூர்ந்து, அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அதிமுக சார்பில் வரும் ஜன.25-ம் தேதி, கட்சி ரீதியாகசெயல்பட்டு வரும் மாவட்டங்களில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ள இடங்கள்மற்றும் அவற்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவோர் விவரங்கள் அடங்கிய பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
மாவட்ட மாணவர் அணிச் செயலாளர்கள், சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளர்களுடனும் அனைத்துஅணிகளின் நிர்வாகிகளுடனும் இணைந்து வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்த வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.