பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் வழங்கக் கோரி ரயில்வே ஊழியர்களின் உண்ணாவிரதம் நிறைவு

பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் வழங்கக் கோரி ரயில்வே ஊழியர்களின் உண்ணாவிரதம் நிறைவு

Published on

சென்னை: கடந்த 2004-ம் ஆண்டுக்கு முன்பு வேலையில் சேர்ந்த தொழிலாளர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை பாதுகாக்க வேண்டும், கடந்த 2004-ம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை வழங்க வேண்டும் என்பனஉள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தெற்குரயில்வே மஸ்தூர் யூனியன்(எஸ்ஆர்எம்யூ), அகில இந்திய ரயில்வே தொழிலாளர் கூட்டமைப்பு (ஏஐஆர்எஃப்) சார்பில் நாடு முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் கடந்த 8-ம் தேதி தொடங்கியது

தெற்கு ரயில்வேயில் சென்னை சென்ட்ரல் மூர்மார்க்கெட் வளாகம், பெரம்பூர் கேரேஜ் பணிமனை, சேலம் கோட்டம் கோவை, திருச்சி, மதுரை, பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது.

இப் போராட்டத்தில் தினமும் 100-க்கும் மேற்பட்டபணியாளர்கள் பங்கேற்று தங்கள் ஆதரவை தெரிவித்தனர். மதுரை, திருச்சியில் நடைபெற்ற உண்ணா விரதப் போராட்டத்துக்கு எஸ்ஆர்எம்யூ தலைவர் ராஜா தரும்,சென்னையில் நடைபெற்ற போராட்டத்துக்கு பொதுச்செயலாளர் கண்ணையாவும், சேலம் கோட்டம் கோவை, பாலக்காட்டில் நடைபெற்ற போராட்டத்தில் எஸ்ஆர்எம்யூ துணை பொதுச் செயலாளர் ஈஸ்வர்லாலும் தலைமை வகித்து பேசினர்.

நான்கு நாட்கள் நடைபெற்ற இப்போராட்டம் நேற்றுநிறைவடைந்தது. மொத்தம் 38 ஆயிரம் பேர் பங்கேற்று தங்கள் ஆதரவை பதிவு செய்ததாக எஸ்ஆர்எம்யூ நிர்வாகிகள் தெரிவித்தனர்.

சென்னை சென்ட்ரலில் நேற்று நடைபெற்ற நிறைவு நாள் போராட்டத்தில் எஸ்ஆர்எம்யூ பொதுச்செயலாளர் என்.கண்ணையா கலந்து கொண்டு பேசினார். பின்னர்செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தனியார்மயமாக்கம்: தேசிய ஓய்வூதியம் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவர வேண்டும், ரயில்வேதுறையில் தனியார் மயமாக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

பாரத் கவுரவ் என்ற பெயரில் 100 ரயில்களை தனியாருக்கு கொடுத்துவிட்டார்கள். இது, முதல் கட்டம்தான். தனியார் மயமாக்குதல் இல்லை என்று கூறி மறைமுகமாக இதை ஊக்குவித்து வருகின்றனர்.

எனவே, தனியார் மயமாக்குதலை கைவிட வேண்டும். 2004-க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு கடந்த 2004-ம் ஆண்டுக்கு முன்பு இருந்த பழைய ஓய்வூதியத்தை கொடுக்க வேண்டும்.ரயிலில்ஏசி பெட்டிகளை அதிகரித்தால், ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவார்கள்.எனவே,பொதுபெட்டிகளை குறைக் கக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார். பேட்டியின்போது, எஸ்ஆர்எம்யூ சென்னை கோட்ட செயலாளர் பால் மேக்ஸ்வெல் ஜான்சன் உள்ளிட்டோர் இருந் தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in