

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே தச்சங்குறிச்சியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளை முட்டி காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த இளைஞர் நேற்று உயிரிழந்தார்.
நிகழாண்டு தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு, புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே தச்சங்குறிச்சியில் கடந்த 6-ம் தேதி நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டில் 559 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. காளைகள் முட்டியதில் பார்வையாளர்கள், மாடுபிடிவீரர்கள் உட்பட 63 பேர் காயமடைந்தனர்.
இதில், மதுரை மாவட்டம் ஊமச்சிகுளத்தைச் சேர்ந்த ராஜூ மகன் மருதா(19) என்பவர் மதுரையில் இருந்து காளை ஓட்டி வந்தவர்களுடன் வந்து ஜல்லிக்கட்டில் கலந்துகொண்டபோது, மற்றொரு காளை முட்டியதில் படுகாயமடைந்தார். இதையடுத்து, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.