

மெட்ரோ ரயில் நிலையங்களில் வணிக பயன்பாடு அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில், தொழில் நடத்திவரும் உரிமம் பெற்ற உரிமையாளர்கள் உடனான இரண்டாவது வாடிக்கையாளர் சந்திப்பு கூட்டம் சென்னைநந்தனத்தில் நேற்று நடைபெற்றது.சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிதி இயக்குநர் பிரசன்னகுமார் ஆச்சார்யா, தலைமை பொதுமேலாளர் கிருஷ்ணன் உள்ளிட்டஅதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், உரிமம் பெற்றவர்கள் தொழில் முனைவோர் தங்களது கோரிக்கைகள், பிரச்சினைகள் குறித்து எடுத்துரைத்தனர்.
இதுகுறித்து, சென்னை மெட்ரோரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: சென்னை மெட்ரோ ரயில்நிலையங்களில் தொழில்புரிவோரின் தங்களின் தேவைகள் பற்றியும், வணிக மேம்பாடு அடைவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் 2-வது முறையாக ஆலோசிக்கப்பட்டது. மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்கட்டமைப்பு வசதி மேம்பாடுகுறித்து, அவர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.
தற்போது, வணிகம் செய்துவரும்இடத்துக்கான கட்டண நிர்ணயம்மற்றும் அடிப்படை வசதிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மெட்ரோரயில் நிறுவனத்தின் வணிக மேம்பாடு அடைய புதிய உத்திகள் ஏதேனும் இருப்பின் அதை நடைமுறைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.