புதுச்சேரியில் பட்டியலின, பழங்குடியினருக்கு வேட்டி, சேலைக்கு பதிலாக ரூ.1,000 @ பொங்கல்

ஆளுநர் தமிழிசை | கோப்புப் படம்
ஆளுநர் தமிழிசை | கோப்புப் படம்
Updated on
1 min read

புதுச்சேரி: புதுச்சேரியில் பொங்கல் பண்டிகையையொட்டி பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு வேட்டி, சேலைக்கு பதிலாக ஆயிரம் ருபாய் வழங்க அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.

புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பகுதிகளில் வசிக்கும் பட்டியலின மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பயனாளிகளுக்கு, பொங்கல் பண்டிகைக்கு வேட்டி, சேலை தரப்படும். வரும் 2024 பொங்கல் பண்டிகைக்கு வேட்டி - சேலைகளுக்கு ஈடாக தொகை ரூ.1,000 வழங்குவதற்கான கோப்புக்கு அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.

அதன்படி புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பகுதிகளில் வசிக்கும் 18 வயது நிரம்பிய பட்டியலின மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பயனாளிகளுக்கு ரூ.1000 வீதம் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும். இதன் மூலம் மொத்தம் 1 லட்சத்து 27 ஆயிரத்து 628 பயனாளிகள் பயன் பெறுவார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in