காய்ச்சல் பாதிப்புள்ள பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்: பொது சுகாதாரத் துறை இயக்குநர் தகவல்

காய்ச்சல் பாதிப்புள்ள பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்: பொது சுகாதாரத் துறை இயக்குநர் தகவல்
Updated on
1 min read

சென்னை: காய்ச்சல் பாதிப்புள்ள பகுதிகளில்சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்தார். மழைக்காலத்தில் டெங்கு,சிக்குன் குனியா, இன்ஃப்ளூயன்ஸா,எலிக் காய்ச்சல், காலரா உட்பட பல்வேறு நோய்த் தொற்றுகள் பரவக்கூடும் என்பதால் கடந்த அக்டோபர் 29-ம் தேதி முதல் டிசம்பர் 30-ம் தேதிவரை 10 வாரங்களுக்கு வாரந்தோறும் சிறப்பு மருத்துவ முகாம்களை தமிழக சுகாதாரத் துறை நடத்தியது. இந்த முகாம்களில் ஏராளமானோர் பங்கேற்று பயன்பெற்றனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாகத் தமிழகத்தில் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருவதால்காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. அதனால், மீண்டும் சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும்என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இது தொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகத்திடம் கேட்டபோது, ``தமிழகத்தில் தற்போது பருவ கால தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு, சிக்குன் குனியா மற்றும் எலிக் காய்ச்சல் போன்ற பாதிப்புகளும் மிகவும் குறைவாகவே உள்ளன.

தற்போதைய சூழலில் கரோனா மற்றும் இன்ஃப்ளூயன்ஸா தொற்றுகள் மட்டுமே வேகமாகப் பரவுகின்றன. அதற்கான தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. அடுத்த கட்டமாகக் காய்ச்சல் மற்றும் வேறு வகையான தொற்று பாதிப்புகள் அதிகமாக உள்ள பகுதிகளில் மட்டும் சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம் பாதிப்பு உள்ள பகுதிகளில் மருத்துவப் பரிசோதனை, சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்'' என்று செல்வவிநாயகம் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in