

விழுப்புரம்: போக்குவரத்து தொழிற்சங்கங்களின் நீண்ட கால கோரிக்கைகளான 6 அம்ச கோரிக்கைகளில் ஒன்றைக் கூட ஏற்க மறுக்கும் தமிழக அரசின் மெத்தனப் போக்கை கண்டித்து இன்று முதல் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளன.
இது தொடர்பாக விழுப்புரம் மண்டல தொழிற்சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறியது: அரசு போக்குவரத்துக்கழக விழுப்புரம் மண்டலத்தில் உள்ள 13 கிளைகளில் 4,526 தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். 724 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின் றன.
இன்று நடைபெறும் வேலை நிறுத்தத்தில் திமுக தொழிற்சங் கமான தொழிலாளர் முன்னேற்ற சங்கம் தவிர மற்ற அனைத்து தொழிற்சங்கங்களும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்க இருப்பதால் 90 சதவீத பேருந்துகள் இயங்க வாய்ப் பில்லை என்றனர்.